தொடரில் இருந்து விலகிய ஸ்மாறன் ரவிச்சந்திரன்; மாற்று வீரரை தேர்வு செய்தது சன்ரைசர்ஸ்!

Updated: Mon, May 05 2025 13:05 IST
Image Source: Google

ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதில் எந்த நான்கு அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் என்ற எதிர்பார்ப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இத்தொடரில் இன்று நடைபெறும் 55ஆவது லீக் போட்டியில் பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை எதிர்த்து அக்ஸர் படேல் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டியானது ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. நடப்பு ஐபிஎல் தொடரில் இவ்விரு அணிகளும் மோதிய முதல் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி வெற்றிபெற்றது. 

இந்நிலையில், அதற்கு பதிலடி கொடுக்கும் முயற்சியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி இன்றைய போட்டியில் விளையாடவுள்ளது. மேற்கொண்டு பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னெறுவதற்கு இந்த போட்டியில் வெற்றிபெறுவது அவசியம் என்பதால், இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. மேலும் இப்போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகியும் வருகின்றனர்.

இதற்கிடையில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியாது முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி அந்த அணியின் ஆல் ரவுண்டர் ஸ்மாறன் ரவிச்சந்திரன் காயம் காரணமாக நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளது. முன்னதாக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் இடம்பிடித்திருந்த நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் ஆடம் ஸாம்பா காயம் காரணமாக தொடரில் இருந்து விலகிய நிலையில் ஸ்மாறன் ரவிச்சந்திரன் மாற்று வீரர்காக தேர்வுசெய்யப்பட்டார். 

அதன்பாடி கர்நாடகாவைச் சேர்ந்த ஸ்மாறன் ரவிச்சந்திரனை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ரூ.30 லட்சத்திற்கு ஒப்பந்தம் செய்தது. இந்நிலையில் பயிற்சியின் போது ஸ்மாறன் ரவிச்சந்திரன் காயமடைந்து தொடரில் இருந்து வெளியேறியதை அடுத்து அவருக்கு பதிலாக, உள்ளூர் போட்டிகளில் விதர்பா அணிக்காக விளையாடி வரும் ஆல் ரவுண்டர் ஹர்ஷ் தூபேவை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ரூ.30 லட்சத்திற்கு ஒப்பந்தம் செய்வதாக அறிவித்துள்ளது. 

ஹர்ஷ் தூபே இதுவரை 16 டி20, 20 லிஸ்ட் ஏ மற்றும் 18 முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி பந்துவீச்சில் 127 விக்கெட்டுகளையும், பேட்டிங்கில் 941 ரன்களையும் சேர்த்து அசத்தியுள்ளார். மேற்கொண்டு நடந்து முடிந்த ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரிலும் விதர்பா அணிக்காக அபார ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன், விதர்பா அணி சாம்பியன் பட்டத்தையும் வெல்வதற்கும் முக்கிய காரணமாகவும் அமைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Also Read: LIVE Cricket Score

சன்ரைசர்ஸ் ஹைதராபாத்: பாட் கம்மின்ஸ் (கேப்டன்), டிராவிஸ் ஹெட், அபிஷேக் சர்மா, ஹென்ரிச் கிளாசென், நிதிஷ் ரெட்டி, இஷான் கிஷன், முகமது ஷமி, ஹர்சல் படேல், ராகுல் சாஹர், ஹர்ஷ் தூபே*, அதர்வா டைடே, அபினவ் மனோகர், சிமர்ஜீத் சிங், ஜீஷன் அன்சாரி, ஜெய்தேவ் உனத்கட், வியான் முல்டர்*, கமிந்து மெண்டிஸ், அனிகேத் வர்மா, ஈஷான் மலிங்கா, சச்சின் பேபி.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை