ஐபிஎல் மெகா ஏலம் பெங்களூரில் இன்றும் நாளையும் (பிப்ரவரி 12, 13) நடைபெறுகிறது. குஜராத் டைட்டன்ஸ், லக்னோ சூப்பா் ஜயன்ட்ஸ் என புதிதாக இரு அணிகள் இணைந்திருக்கும் நிலையில், 10 அணிகள் ஏலத்தில் இருக்கின்றன. அவை ஏலத்தில் எடுப்பதற்காக மொத்தமாக 590 வீரா்கள் களம் காண்கின்றனா். 

Advertisement

ஐபிஎல் ஏல நடத்துநராக எட்மியட்ஸ் பணியாற்றுகிறார். ஐபிஎல் போட்டியின் ஆரம்பம் முதல் ரிச்சர்ட் மேட்லி, ஏல நடத்துநராகப் பணியாற்றினார். 2018 முதல் எட்மியட்ஸ் அப்பணியைத் தொடர்ந்து வருகிறார். 

Advertisement

இந்நிலையில் இன்று மதியம் 2 மணி அளவில் ஏலம் நடைபெற்றபோது ஏல நடத்துநர் ஹக் எட்மீட்ஸ் திடீரென மயங்கி விழுந்தார். வனிந்து ஹசரங்காவை அணிகள் தேர்வு செய்ய மும்முரமாக இருந்தபோது மேடையிலிருந்து எட்மியட்ஸ் திடீரென மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. 

இதையடுத்து ஐபிஎல் ஏலம் சிறிது நேரத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மேலும் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் தற்போது நலமாக உள்ளார் என்று தெரிவித்துள்ளனர். இருப்பினும் ஏல நடத்துநர் மயங்கி விழுந்த சம்பவம் காண்போரை அதிர்ச்சிகுள்ளாக்கியுள்ளது.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News