இந்தியாவின் உள்ளூர் கிரிக்கெட் தொடரான இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) இதுவரை 15 சீசன்கள் வெற்றிகரமாக முடிந்துள்ளன. இதில் 15ஆவது சீசனில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் என்ற 2 அணிகள் புதிதாக களமிறங்கியதால் கடந்த சீசனுக்கான ஏலம் மெகா ஏலமாக நடத்தப்பட்டது.

Advertisement

அதனால் அடுத்த சீசனுக்கான ஏலம் மினி ஏலமாக நடக்கவுள்ளது. அடுத்த ஐபிஎல் சீசன், 2023ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் தொடங்கும் என்று தகவல்வகள் வெளியாகி வருகின்றன. அடுத்த சீசனுக்கான மினி ஏலம் வரும் டிசம்பர் 3வது வாரத்தில் பெங்களூருவில் நடக்கவுள்ளது. ஏலத்திற்கு முன்பாக ஏலத்தில் கலந்துகொள்ளும் வீரர்கள் பட்டியலை தயார் செய்யவேண்டும். 

Advertisement

இந்நிலையில், ஐபிஎல் அணிகள் தக்கவைக்க விரும்பும் வீரர்கள் பட்டியலை வரும் நவம்பர் 15ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று ஐபிஎல் நிர்வாகம் அறிவித்துள்ளது. டி20 உலக கோப்பை தொடர் நவம்பர் 13 முடியும் நிலையில், இந்த டி20 உலக கோப்பையில் வீரர்கள் ஆடுவதை பொறுத்து  அணிகள் தங்களுக்கு தேவையான மற்றும் தேவையில்லாத வீரர்களை முடிவு செய்யும். அடுத்த சீசனுக்கான ஏலத்திற்கு ஒவ்வொரு அணிக்கும் முன்பை விட கூடுதல் தொகை அனுமதிக்கப்படும் என்று தெரிகிறது.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News