அயர்லாந்து - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி பெல்ஃபெஸ்டில் இன்று நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற அயர்லாந்து அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.

Advertisement

அதன்படி களமிறங்கிய நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர் மார்ட்டின் கப்தில் 11 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். இதையடுத்து ஜோடி சேர்ந்த ஃபின் ஆலன்  - தனே கிளெவர் இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.

Advertisement

பின் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஃபின் ஆலன் 20 பந்துகளில் 35 ரன்களை எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்தார். கடந்த போட்டியில் அரைசதம் கடந்து அசத்திய கிளென் பிலீப்ஸும் 26 ரன்களோடு நடையைக் கட்டினார்.

ஆனாலும் மறுமுனையில் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய தனே கிளெவர் 39 பந்துகளில் தனது முதல் சர்வதேச டி20 அரைசதத்தைப் பதிவுசெய்தார். இதன்மூலம் நியூசிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 179 ரன்களைச் சேர்த்துள்ளது.

இதையடுத்து கடின இலக்கை நோக்கி களமிறங்கிய அயர்லாந்து அணியின் தொடக்க வீரர்கள் பால் ஸ்டிர்லிங், கேப்டன் ஆண்டி பால்பிர்னி அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர். 

ஆனால் 21 ரன்களில் பால் ஸ்டிர்லிங்கும், 10 ரன்களில் பால்பிர்னியும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். பின்னர் களமிறங்கிய வீரர்களாலும் நியூசிலாந்து பந்துவீச்சாளர்களை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். அதிலும் 14ஆவது ஓவரை வீசிய மைக்கேல் பிரேஸ்வெல் ஹாட்ரிக் விக்கெட்டுகளை கைப்பற்றியும் அசத்தினார்.

Advertisement

இதனால் 13.5 ஓவர்களிலேயே அயர்லாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 91 ரன்களில் சுருண்டது. நியூசிலாந்து தரப்பில் இஷ் சோதி, மைக்கேல் பிரேஸ்வெல் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி வெற்றிக்கு உதவினர்.

இதன்மூலம் நியூசிலாந்து அணி 88 ரன்கள் வித்தியாசத்தில் அயர்லாந்தை வீழ்த்தியதுடன், 2-0 என்ற கணக்கில் டி20 தொடரையும் கைப்பற்றி அசத்தியது.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News