அயர்லாந்து - ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டியானது கடந்த ஜூலை 25ஆம் தேதி பெல்ஃபெஸ்டில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற அயர்லாந்து அணி முதலில் பந்துவீசுவதாக அறித்ததையடுத்து, முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே அணி 210 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதன்பின் முதல் இன்னிங்ஸைத் தொடர்ந்த அயர்லாந்து அணியானது 250 ரன்கள் சேர்த்து விக்கெட்டை இழக்க, முதல் இன்னிங்ஸில் 40 ரன்கள் முன்னிலையும் பெற்றது. 

Advertisement

இதனைத்தொடர்ந்து இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய ஜிம்பாப்வே அணியானது இரண்டாவது இன்னிங்ஸில் 197 ரன்களில் ஆல் அவுட்டானதுடன், அயர்லாந்து அணிக்கு 157 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. அதன்பின் இலக்கை நோக்கி களமிறங்கிய அந்த அணியில் டாப் ஆர்டர் வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழக்க, பின்னர் களமிறங்கிய லோர்கன் டக்கர் - ஆண்டி மெக்பிரைன் ஆகியோர் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர்.

Advertisement

இதன்மூலம் அயர்லாந்து அணியானது 4 விக்கெட் வித்தியாசத்தில் ஜிம்பாப்வே அணியை வீழ்த்தி வெற்றிபெற்றதுடன், டெஸ்ட் தொடரையும் கைப்பற்றி அசத்தியது. இப்போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஆண்டி மெக்பிரைன் ஆட்டநாயகன் விருதை வென்றார். இந்நிலையில் இப்போட்டியில் ஐசிசியின் நடத்தை விதிகளை மீறியதாக அயர்லாந்து அணி வீரர் ஹாரி டெக்டருக்கு ஐசிசி அபராதம் வித்துள்ளது. 

அதன்படி இப்போட்டியின் போது ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்த ஹாரி டெக்டர், நடுவரின் முடிவிற்கு எதிர்ப்பு தெரிவித்து களத்திலேயே நின்றிருந்தார். அதன்பின் அவர் பெவிலியனுக்கு திரும்பினார். இந்நிலையில் ஹாரி டெக்டரின் இந்த செயல்பாடானது ஐசிசியின் நடத்தை விதிகளுக்கு எதிரானது என்பதால், அவருக்கு போட்டி கட்டணத்தில் இருந்து 15 சதவீதம் அபாராதம் விதித்துள்ளது.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News