யுஏஇ-யில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் அயர்லாந்து!
Advertisement
நடப்பாண்டு இந்தியாவில் நடைபெற இருந்த டி20 உலகக்கோப்பை தொடர் கரோனா அச்சுறுத்தல் காரணமாக அக்டோபர் 17ஆம் தேதி முதல் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் நடைபெறவுள்ளது.
இத்தொடருக்காக அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன. அந்தவகையில் அயர்லாந்து அணி, அக்டோபர் மாத தொடக்கத்தில் ஐக்கிய அரபு அமீரக அணியுடன் டி20 தொடரில் விளையாட திட்டமிட்டுள்ளது.
அதன்படி இரு அணிகளுக்கும் இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் அக்டோபர் 07ஆம் தேதியிலிருந்து 10ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
அதேசமயம் டி20 உலகக்கோப்பை தொடருக்கு முன்னதாக அயர்லாந்து அணி, ஸ்காட்லாந்து அணியுடன் பயிற்சி போட்டியிலும் பங்கேற்கும் என அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.