இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே பாரம்பரியமாக நடைபெற்று வரும் பார்டர் - கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடர், இந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற இருக்கிறது. அதன்படி மொத்தம் 5 போட்டிகள் கொண்ட தொடராக நடைபெறும் இத்தொடரானது இம்மாத இறுதியில் தொடங்குகிறது. மேலும் இத்தொடருக்கான போட்டி ஆட்டவணையும் சமீபத்தில் அறிவிக்கப்பட்டிருந்தது.

Advertisement

இந்நிலையில் இத்தொடருக்கு முன்னதாக இந்திய ஏ அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆஸ்திரேலிய ஏ அணிக்கு எதிராக பயிற்சி ஆட்டங்களில் விளையாடி வருகிறது. அந்தவகையில் இந்தியா ஏ - ஆஸ்திரேலியா ஏ அணிகளுக்கு இடையேயான முதல் பயிற்சி போட்டியானது மெக்காயில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய ஏ அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய இந்திய ஏ அணி பேட்டர்கள் முதல் இன்னிங்ஸில் பெரிதளவில் சோபிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியன் திரும்பினர். 

Advertisement

இதனால் முதல் இன்னிங்ஸில் இந்திய ஏ அணி 107 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் ஆல் அவுட்டானது. இதில் அதிகபட்சமாக தேவ்தத் படிக்கல் 36 ரன்களைச் சேர்த்தர். ஆஸ்திரேலிய ஏ அணி தரப்பில் பிரெண்டன் டோகெட் 6 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதனையாடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய ஆஸ்திரேலிய ஏ அணியிலும் சீரான இடைவேளையில் விக்கெட்டுக்கெடுகளை இழந்து தடுமாறியது. அந்த அணியில் அதிகபட்சமாக கேப்டன் மெக்ஸ்வீனி 39 ரன்களையும், கூப்பர் கனொலி 37 ரன்களையும் சேர்த்தனர். இதனால் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 195 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டானது. 

இந்திய அணி தரப்பில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய முகேஷ் குமார் 6 விக்கெட்டுகளையும், பிரஷித் கிருஷ்ணா 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதனையடுத்து 88 ரன்கள் பின் தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய ஏ அணி சாய் சுதர்ஷனின் சதம் மற்றும் தேவ்தத் படிக்கலின் அரைசதம் காரணமாக இரண்டாவது இன்னிங்ஸில் 312 ரன்களைச் சேர்த்தது. இதில் அதிகபட்சமாக சாய் சுதர்ஷன் 103 ரன்களையும், தேவ்தத் படிக்கல் 88 ரன்களையும் சேர்த்தனர். இதன்மூலம் ஆஸ்திரேலிய அணிக்கு 225 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. 

இதையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய ஆஸ்திரேலிய அணியில் சாம் கொண்டாஸ், கேமரூன் பான்கிராஃப், மார்கஸ் ஹாரிஸ் ஆகியோர் சொற்ப ரன்களில் விக்கெட்டுகளை இழந்தாலும், இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த கேப்டன் மெக்ஸ்வீனி 88 ரன்களையும், வெப்ஸ்டர் 61 ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். இதன்மூலம் ஆஸ்திரேலியா ஏ அணி 7விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா ஏ அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது போட்டியானது நவம்பர் 7ஆம் தேதி மெல்போர்னில் நடைபெறவுள்ளது.

இந்நிலையில் இப்போட்டியின் போது இந்திய வீரர் இஷான் கிஷான் கள நடுவர் ஷான் கிரேய்க்கிடம் வாக்குவதாத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி இப்போட்டியின் கடைசி நாள் ஆட்டம் இன்று நடைபெற்ற நிலையில், பந்தில் கீரல்கள் ஏற்பட்டு சேதமடைந்திருப்பதால் அதனை மாற்ற வேண்டும் என கள நடுவர் இந்திய ஏ அணி கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட்டிடம் தேரிவித்துள்ளார். அப்போது அவர்களது உரையாடலில் குறுக்கிட்ட இஷான் கிஷான், ”இதே பந்தில் தான் நாங்களும் பேட்டிங் செய்தோம், ஆனால் தற்போது புதிய பந்தை தேர்ந்தெடுப்பது முட்டாள் தனமான முடிவு” என்று நடுவரை வசைபாடும் வகையில் பேசியுள்ளார். 

Advertisement

இதனால் கள நடுவர் கிரெய்க்கும், இஷான் கிஷன், உங்களது பேச்சில் மரியாதை இல்லை. இது மிகவும் தவறான பேச்சு. இதனை நான் நிச்சயம் புகார் அளிப்பேன் என்று கூறியதுடன், பந்தில் ஏற்பட்ட கீறல்களுக்கு இந்திய வீரர்கள் மட்டுமே காரணம் என்றும், எனவே பந்து மாற்றப்படும் பொறுப்பு அவர்கள் மீது உள்ளது என்றும் கூறியதுடன் புதிய பந்தையும் தேர்வுசெய்தார். இந்நிலையில் இஷான் கிஷான் கள நடுவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட காரணத்தால், அடுத்த போட்டியில் அவர் விளையாட தடை விதிக்கப்படும் என்றும், மேற்கொண்டு ஐசிசி நடவடிக்கையும் அவர் மீது பாயும் என்ற தகவல்களும் வெளியாகியுள்ளன.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News