இந்திய அணியின் அதிரடி தொடக்க வீரராக அறியப்பட்டவர் இஷான் கிஷான். கடந்தாண்டு வரை இந்திய அணியின் மூன்று வடிவிலான கிரிக்கெட் போட்டிகளிலும் இடம்பிடித்து விளையாடி வந்த இஷான் கிஷான், தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு முன்னதாக தனிப்பட்ட காரணங்களுக்காக தொடரில் இருந்து விலகினார். இருப்பினும் இஷான் கிஷானை உள்ளூர் போட்டிகளில் விளையாடும் படி பிசிசிஐ அறிவுறுத்தி இருந்தது. 

Advertisement

ஆனால் பிசிசிஐயின் கோரிக்கையை ஏற்க மறுத்த இஷான் கிஷான், ஹர்திக் பாண்டியாவுடன் இணைந்து ஐபிஎல் தொடருக்காக பயிற்சி மேற்கெண்டதும், ஸ்ரேயாஸ் ஐயர் காயத்தை காரணம் காட்டி ரஞ்சி கோப்பை தொடரில் விளையாட மறுத்ததன் காரணமாக கோபமடைந்த பிசிசிஐ அவர்கள் இருவரின் மீதும் ஒழுங்கு நடவடிக்கை மேற்கெண்டதன் விளைவாக இந்திய அணியின் ஒப்பந்த பட்டியலிலிருந்து நீக்கப்பட்டனர். 

Advertisement

மேற்கொண்டு நடந்து முடிந்த ஐபிஎல் தொடரிலும் இஷான் கிஷன் பெரிதளவில் சோபிக்கமால் இருந்ததன் காரணமாக, மீண்டும் அவர் இந்திய அணிக்கு தேர்வாவது சந்தேகம் தான் என்றும் தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில் எதிர்வரும் செப்டம்பர் மாதத்தில் தொடங்கவுள்ள துலீப் கோப்பை தொடரில் ஜார்கண்ட் மாநில அணிக்காக இஷான் கிஷான் விளையாடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அந்த அணியின் கேப்டனாகவும் அவர் செயல்படவுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் அதற்கு முன்னதாக தமிழ்நாட்டில் நடைபெறவுள்ள பாரம்பரிய கிரிக்கெட் தொடர்களில் ஒன்றான புஜ்ஜி பாபு கோப்பை தொட்ரில் ஜார்கண்ட் அணி தரப்பில் இஷான் கிஷன் விளையாடவுள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி ஆகஸ்ட் 15ஆம் தேதி தொடங்கும் இத்தொடரில் ஜார்கண்ட் அணியின் கேப்டனாகவும் இஷான் கிஷன் விளையாடவுள்ளார்.  அவர் தற்போது இந்திய அணியில் இடம்பிடிக்க முடியாமல் திணறி வருகிறார்,

அதனால்தான் இதுபோன்ற உள்நாட்டு போட்டிகளில் மீண்டும் தன்னை நிரூபிக்க வேண்டும் கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.  இந்திய அணிக்காக கடந்த 2021ஆம் ஆண்டு அறிமுகமான இஷான் கிஷான் இதுநாள் வரை, 2 டெஸ்ட், 27 ஒருநாள் மற்றும் 32 டி20 போட்டிகளில் விளையாடி 1700க்கும் மேற்பட்ட ரன்களைச் சேர்த்துள்ளார். மேலும் இவர் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிவேகமாக இரட்டை சதத்தை விளாசிய வீரர் எனும் சாதனையையும் படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News