ஒருநாள் கிரிக்கெட்டில் இந்திய அணியில் ரோஹித்துடன் தவான் தான் தொடக்க வீரராக ஆடுவார் என்பதை வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான ஒருநாள் தொடரிலேயே இந்திய அணி உரக்க தெரிவித்துவிட்டது. அடுத்த ஆண்டு (2023) ஒருநாள் கிரிக்கெட் உலக கோப்பை தொடர் நடக்கவுள்ள நிலையில்,  ராகுல் டிராவிட் பயிற்சியின் கீழ் ரோஹித்தின் கேப்டன்சியில் வலுவான ஒருநாள் அணியை கட்டமைக்கும் பணி தொடங்கிவிட்டது.

Advertisement

அந்தவகையில், ஒருநாள் கிரிக்கெட்டை பொறுத்தமட்டில் ரோஹித்துடன் தவான் தொடக்க வீரராகவும், கேஎல் ராகுல் மிடில் ஆர்டரிலும் ஆடவுள்ளனர். இது பேட்டிங் ஆர்டரின் டெப்த்தை அதிகரிக்கும் என்பதாலும், ரோஹித்தின் வெற்றிகரமான ஓபனிங் பார்ட்னர் தவான் என்பதால் இருவருக்கும் இடையே நல்ல புரிதல் இருப்பதாலும் அவர் தான் தொடக்க வீரராக இறங்கவுள்ளார்.

Advertisement

ஆனால் டி20 கிரிக்கெட்டை பொறுத்தமட்டில் ரோஹித்துடன் ராகுல் - இஷான் கிஷன் ஆகிய இருவரும் யார் தொடக்க வீரராக ஆடுவார் என்பது பெரும் கேள்வியாக உள்ளது. இஷான் கிஷன் இளம் அதிரடி வீரர். அதேவேளையில், டி20 கிரிக்கெட்டில் ரோஹித்துடன் ராகுல் தான் தொடக்க வீரராக ஆடிவந்தார். ராகுல் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டி20 தொடரில் ஆடாததால் இந்த தொடரில் ரோஹித்துடன் இஷான் கிஷன் தொடக்க வீரராக ஆடிவருகிறார்.

ரோஹித்துடன் இஷான் கிஷனே தொடக்க வீரராக ஆடலாம். ஒருநாள் கிரிக்கெட்டில் மிடில் ஆர்டரில் பேட்டிங் ஆட முடிகிறது என்றால், டி20 போட்டிகளிலும் ராகுல் மிடில் ஆர்டரிலேயே பேட்டிங் ஆடலாம் என்ற கருத்துகளும் உள்ளன.

இந்நிலையில், இதுகுறித்து ஆஷிஷ் நெஹ்ரா மற்றும் பார்த்திவ் படேல் கருத்து தெரிவித்துள்ளனர். இதுகுறித்து பேசிய பார்த்திவ் படேல், “கேஎல் ராகுல் தான் நீண்டகால ஓபனிங் ஆப்சனாக இருப்பார். ராகுல் அணிக்குள் வந்துவிட்டால், அவர்தான் ரோஹித்துடன் தொடக்க வீரராக ஆட வேண்டும். என்னை பொறுத்தமட்டில் டி20 உலக கோப்பையிலும் ரோஹித்துடன் ராகுலே தொடக்க வீரராக ஆடவேண்டும்” என்று தெரிவித்தார்.

ஆஷிஷ் நெஹ்ராவும் அதே கருத்தை தெரிவித்துள்ளார். ரோஹித்துடன் ராகுல் தான் தொடக்க வீரராக இறங்கவேண்டும் என்று நெஹ்ராவும் கூறியுள்ளார்.

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News