பிஎஸ்எல் 2021 குவாலிஃபையர் : முல்தான் சுல்தான்ஸ் vs இஸ்லாமாபாத் யுனைடெட்; போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
பிஎஸ்எல் 2021 குவாலிஃபையர் : முல்தான் சுல்தான்ஸ் vs இஸ்லாமாபாத் யுனைடெட்; போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
அபுதாபியில் நடைபெற்று வரும் பிஎஸ்எல் தொடரின் 6ஆவது சீசன் தற்போது இறுதி காட்டத்தை எட்டியுள்ளது. இதில் நாளை நடைபெறும் முதல் தகுதிச்சுற்று போட்டியில் முல்தான் சுல்தான்ஸ் அணி, இஸ்லாமாபாத் யுனைடெட் அணியை எதிர்கொள்ளவுள்ளது.
போட்டி தகவல்கள்
- மோதும் அணிகள் : முல்தான் சுல்தான்ஸ் vs இஸ்லாமாபாத் யுனைடெட்
- இடம் : ஷேக் சயீத் மைதானம், அபுதாபி
- நேரம் : மாலை 6.30 மணி
போட்டி முன்னோட்டம்
முல்தான் சுல்தான்ஸ்
முகமது ரிஸ்வான் தலைமையிலான முல்தான் சுல்தான்ஸ் அணி நடப்பு சீசனில் பல சிறப்பான ஆட்டங்களை வெளிப்படுத்தியுள்ளது. அதிலும் அணியின் தொடக்க வீரர்கள் ஷான் மசூத், ரிலே ரஸ்ஸோவ், ஜான்சன் சார்லஸ் என பல அதிரடி வீரர்கள் இருப்பது அணிக்கு பெரும் பலனாக அமைந்துள்ளது.
பந்துவீச்சை பொறுத்தவரை ஷான்நவாஸ் தானி, இம்ரான் தாஹிர் ஆகியோர் தொடர்ந்து அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவதால், நிச்சயம் இந்த ஜோடி எதிரணிக்கு சவாலாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.
இஸ்லாமாபாத் யுனைடெட்
இஸ்லாமாபாத் யுனைடெட் அணியும் தொடர்ந்து அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி இமாலய இலக்கை நிர்ணயித்துள்ளது. காலின் முன்ரோ, உஸ்மான் கவாஜா ஆகியோர் தொடர்ந்து அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவது அணிக்கு உத்வேகமளிக்கிறது.
பந்துவீச்சில் முகமது வாசிம் ஜூனியர், ஸ்ஃபர் கோகர் ஆகியோர் சிறப்பாக செயல்படும் பட்சத்தில் அணியின் வெற்றி வாய்ப்பு உறுதியாகும்.
நேருக்கு நேர்
- மோதிய ஆட்டங்கள்: 8
- இஸ்லாமாபாத் வெற்றி : 5
- சுல்தான்ஸ் வெற்றி : 3
உத்தேச அணி
முல்தான் சுல்தான்கள் - ஷான் மசூத், முகமது ரிஸ்வான் (கே), சோஹைப் மக்சூத், ஜான்சன் சார்லஸ், ரிலே ரோசோவ், ஹம்மட் அசாம், சோஹைல் தன்வீர், சோஹைல் கான், முகமது உமர், இம்ரான் தாஹிர், ஷான்நவாஸ் தானி.
இஸ்லாமாபாத் யுனைடெட் - உஸ்மான் கவாஜா, காலின் முன்ரோ, முஹம்மது அக்லக் , சதாப் கான் (கே), உசேன் தலாத், இப்திகார் அகமது, ஆசிப் அலி, பஹீம் அஷ்ரப், முகமது வாசிம் ஜூனியர், அலிகான், ஹசன் அலி.
ஃபேண்டஸி லெவன்
விக்கெட் கீப்பர்கள் - முகமது ரிஸ்வான்
பேட்ஸ்மேன்கள் - காலின் முன்ரோ, பிராண்டன் கிங், ஜான்சன் சார்லஸ், சோஹைப் மக்சூத், ரிலே ரோசோவ்
ஆல்ரவுண்டர்கள் - இஃப்திகர்-அகமது
பந்து வீச்சாளர்கள் - ஜாபர் கோஹர், ஹசன் அலி, ஷான்நவாஸ் தானி, இம்ரான் தாஹிர்.