ஆசிய கோப்பை தொடரில் இன்று நடைபெறும் சூப்பர் 4 சுற்றில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. லீக் சுற்றில் பாகிஸ்தான் அணியை இந்தியா வீழ்த்தியிருந்த சூழலில் இந்த போட்டியில் பழிவாங்க பாகிஸ்தான் காத்துள்ளது.

Advertisement

இந்திய அணியின் பந்துவீச்சை விட பாகிஸ்தானின் பந்துவீச்சு சிறப்பாக உள்ளதாக ஒரு பேச்சு இருந்து வருகிறது. ஏனென்றால் ஹாங்காங் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 5 விக்கெட்களை மட்டுமே எடுத்து 157 ரன்களை விட்டுக்கொடுத்தது. ஆனால் அதே ஹாங்காங் அணியை 38 ரன்களுக்கு ஆல் அவுட்டாக்கி பாகிஸ்தான் புதிய சாதனை படைத்தது. இதனால் இந்தியாவின் பவுலிங் பலவீனம் என கூறுகின்றனர்.

Advertisement

இந்நிலையில் பத்திரிகையாளர் சந்திப்பின் போது, டிராவிட்டிடம் இதுகுறித்து கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், பாகிஸ்தான் அணியுடன் ஒப்பிடுகையில் இந்திய அணியின் பந்துவீச்சும் மிகசிறப்பாக இருக்கிறது. அவர்களிடம் தரமான பந்துவீச்சாளர்கள் இருக்கிறார்கள் என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும். ஆனால் அதே நேரம், இந்திய அணியில் நல்ல முடிவுகளை கொடுக்கக்கூடிய பவுலர்கள் உள்ளனர் எனக் கூறினார்.

இந்த கருத்தை கூறிவிட்டு திடீரென ராகுல் டிராவிட் சிரித்தார். இதனால் குழப்பமடைந்த பத்திரிகையாளர்கள், ஏன் சிரிக்கிறீர்கள் என கேட்டனர். அதற்கு, " 4 எழுத்துக்களில் ஒரு வார்த்தையை கூற நினைத்தேன், ஆனால் அதனை கூற முடியவில்லை. Sல் தொடங்கும் அந்த வார்த்தையை நீங்கள் புரிந்துக்கொள்வீர்கள் என நினைக்கிறேன் எனக் கூறிவிட்டு மீண்டும் சிரித்தார்.

டிராவிட் மறைமுகமாக கூறிய அந்த வார்த்தை 'Sexy' என்பதை புரிந்துகொண்ட செய்தியாளர்கள் உள்பட அனைவரும் கலகலவென சிரித்தனர்.  ஆனால் ஆபாசமான வார்த்தை என்பதால் அவர் கூறவில்லை. இதனை புரிந்துக்கொண்ட பத்திரிகையாளர்கள் அனைவரும் சிரித்தனர். இதுகுறித்த வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. இன்னும் சிலர், நம்ம ராகுல் டிராவிட்டா இது என ஆச்சரியப்பட்டுள்ளனர்

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News