தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக அதனுடைய சொந்த மண்ணில் இந்திய அணி விளையாடும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நேற்று டர்பன் நகரில் தொடங்கியது. 2024 டி20 உலகக் கோப்பைக்கு தேவையான வீரர்களை கண்டறியும் பயணத்தின் அங்கமாக நடைபெறும் இத்தொடரில் சமீபத்தில் ஆஸ்திரேலியாவை 4 – 1 என்ற கணக்கில் தோற்கடித்த சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இளம் இந்திய அணி களமிறங்கியுள்ளது.

Advertisement

அதில் சமீபத்திய வெஸ்ட் இண்டீஸ், அயர்லாந்து, ஆசிய விளையாட்டுப் போட்டிகள் போன்ற தொடர்களில் ஜெய்ஸ்வால், ருதுராஜ், ரவி பிஷ்னோய் போன்ற இளம் வீரர்கள் சிறப்பாக விளையாடி தங்களை அடுத்த தலைமுறை வீரர்களாக அடையாளப்படுத்தியுள்ளனர். அதிலும் குறிப்பாக மிடில் ஆர்டரில் விளையாடும் இடது கை பேட்ஸ்மேன் ரிங்கு சிங் அடுத்த ஃபினிஷராக உருவெடுப்பார் என்று ரசிகர்கள் ஆழமாக நம்பும் அளவுக்கு தொடர்ந்து அசத்தி வருகிறார்.

Advertisement

இந்நிலையில் இந்திய டி20 அணியில் இத்தொடர் மட்டுமல்லாமல் வருங்காலங்களில் 6ஆவது இடத்தில் விளையாடுவதற்கு ரிங்கு சிங் மிகவும் பொருத்தமானவர் என்று தென் ஆப்பிரிக்க ஜாம்பவான் ஜாக் காலிஸ் கூறியுள்ளார். இதுபற்றி பேசிய அவர், “ரிங்கு க்ளாஸ் வீரர் என்பதை கடந்த சில மாதங்களாக வெளிப்படுத்திய செயல்பாடுகளால் நீங்கள் அறிய முடியும். இந்தியாவுக்காக அவர் போட்டிகளை ஃபினிஷிங் செய்துள்ளார். 

அது முட்டாள்தனமான கிரிக்கெட் அல்ல. ஃபினிஷிங் என்பது தேவையான நேரத்தில் நீங்கள் நல்ல ஷாட்டுகளை அடிப்பதாகும். அந்த வகையில் இன்னிங்ஸின் கடைசி நேரங்களில் தேவைப்படும் போது அவர் அட்டாக் செய்து விளையாடுகிறார். அவர் தான் இந்தியாவுக்காக 6வது இடத்தில் விளையாடக்கூடிய சரியான வீரர். அவர் இருப்பது இதர வீரர்களுக்கும் போட்டியை வெற்றிகரமாக ஃபினிஷிங் செய்வதற்கான தன்னம்பிக்கையை கொடுக்கும். 

அதாவது ஒருவர் சிறப்பாக செயல்படாமல் போனால் இதர வீரர்களில் சிலர் வந்து வெற்றியை பெற்றுக் கொடுக்க முடியும். எனவே என்னை பொறுத்த வரை ரிங்கு சிங் 6வது விளையாடுவதற்கு சரியானவர். அவருக்கு நியாயமான வாய்ப்புகள் கொடுக்கப்பட வேண்டும்” என்று கூறினார்.முன்னதாக யுவராஜ் சிங் போல மிடில் ஆர்டரில் வருங்காலங்களில் இந்தியாவுக்காக ரிங்கு சிங் அசத்துவார் என்று மற்றொரு ஜாம்பவான் சுனில் கவாஸ்கரும் சமீபத்தில் பாராட்டியிருந்தார்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News