இந்த ஐவர் உலகக்கோப்பையில் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கக்கூடியவர்கள் - ஜாக் காலிஸ்!

Updated: Thu, Sep 14 2023 21:42 IST
Image Source: Google

ஐசிசியின் ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் வரும் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் நடைபெறவுள்ளது.இந்த தொடருக்கு தயாராகும் விதமாக உலகின் பல்வேறு அணிகளும் தங்களுடைய இறுதி கட்ட பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் வரும் உலக கோப்பையில் கவனத்தை ஈர்க்கக்கூடிய ஐந்து வீரர்கள் குறித்து தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் ஜாம்பவான் ஜாக் காலிஸ் கருத்து தெரிவித்துள்ளார். 

அவரது இந்த பட்டியலில் முதலிடத்தை பிடித்திருக்கக் கூடியவர் ஆஃப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் சுழற் பந்துவீச்சாளர் ரஷித் கான். இந்தியாவில் தற்போது உலகக்கோப்பை போட்டி நடைபெற இருப்பதால் ஆடுகளம் சுழற் பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும். இதனால் ரஷீத் கான் எதிரணி பேட்ஸ்மேன்களுக்கு சிம்மசொப்பனமாக இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் பேட்டிங்களும் அதிரடியாக விளையாடக் கூடியவர் ரஷீத் கான் என்பதால் அவர் மீது தனி கவனம் இருக்கிறது. இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்திருக்கக் கூடியவர். இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி. உலக கோப்பையை இந்திய அணி வெல்ல வேண்டும் என்றால் விராட் கோலி அதிக ரன்கள் எடுக்க வேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

இந்தப் பட்டியலில் மூன்றாவது இடத்தை பிடித்திருக்கக் கூடியவர் தென் ஆப்பிரிக்கா வேகப்பந்துவீச்சாளர் ஆன்ரிச் நோர்ட்ஜே. தன்னுடைய அசுர வேகத்தால் பேட்ஸ்மேன்களுக்கு தூக்கம் இல்லா இரவுகளை பரிசாக வழங்கக்கூடிய நோக்கியா ஆட்டத்தின் இறுதி கட்டத்தில் யாக்கர்களை வீசி திணறடிப்பார். இதனால் இவருடைய செயல்பாடும் கவனிக்க கூடியதாக இருக்கும்.

இந்த பட்டியலில் நான்காவது இடத்தை பிடித்திருப்பவர் இங்கிலாந்து கிரிக்கெட் அணியில் அதிரடி வீரர் ஜோஸ் பட்லர். இங்கிலாந்து அணியின்  கேப்டனாக கலந்து இருக்கக்கூடிய ஜாஸ் பட்லர் அதிரடியாக விளையாடி ரன்களை சேர்க்கக் கூடியவர். எதிரணி பந்துவீச்சை மைதானத்தில் நான்கு பக்கமும் அடிக்கக்கூடிய வீரராக ஜாஸ் பட்லர் உள்ளார். இதனால் இந்த உலகக் கோப்பையில் இவர் நிச்சயம் கவனிக்கத்தக்க வீரராக இருப்பார். 

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by ICC (@icc)

இப்பட்டியலில் ஐந்தாவது இடத்தை பிடித்திருக்கக் கூடியவர் உலகின் நம்பர் ஒன் ஒருநாள் பேட்ஸ்மனான பாபர் ஆசாம் இருக்கிறார். பாகிஸ்தான் கேப்டனாக இருக்கும் பாபர் ஆசாம், இந்த உலக கோப்பையில் பெரிய சாதனை படைப்பார் என எதிர்பார்ப்பதாக காலிஸ் தெரிவித்துள்ளார். இந்நிலையில் ஐசிசி வெளியிட்டுள்ள இக்காணொளியானது இணையத்தில் இணையத்தில் வைரலாகி வருகிறது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை