ENG vs IND: சொந்த மண்ணில் மகுடம் சூடிய ஆண்டர்சன்!
இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3ஆவது டெஸ்ட் போட்டி லீட்ஸில் உள்ள ஹெட்டிங்லே மைதானத்தில் நடைபெற்றது. இதில் இங்கிலாந்து அணி இன்னிங்ஸ் மற்றும் 76 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பெற்றது.
இப்போட்டியின் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் 3 விக்கெட்டும், 2ஆவது இன்னிங்சில் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினார். இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 630 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.
மேலும் இன்று 2ஆவது இன்னிங்சில் ரஹானேவை வீழ்த்தியதன் மூலம் சொந்த நாட்டில் 400 விக்கெட்டை கைப்பற்றி ஆண்டர்சன் அசத்தியுள்ளார்.
இதுவரை செந்த நாட்டில் 94 டெஸ்ட் போட்டியில் விளையாடி ஆண்டர்சன் இச்சாதனையை படைத்துள்ளார். இதில் 42 ரன்கள் விட்டுக்கொடுத்து 7 விக்கெட் வீழ்த்தியதே ஒரு இன்னிங்சில் இவரது சிறந்த பந்து வீச்சாகும்.
இதற்கு முன் இலங்கையை சேர்ந்த சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளீதரன் சொந்த நாட்டில் 493 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். அதன்பின் சொந்த நாட்டில் 400 விக்கெட்டை தாண்டிய ஒரே பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read: சிட்னி சிக்சர்ஸில் மீண்டும் ஓராண்டு ஒப்பந்தமான பிராத்வைட்!
முத்தையா முரளீதரன் டெஸ்ட் கிரிக்கெட்டில் 800 விக்கெட்டுகள் வீழ்த்தி முதல் இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.