ஆஷஸ் தொடர்: இங்கிலாந்து அணியில் அண்டர்சன், பிராட்!

Updated: Wed, Dec 15 2021 15:12 IST
Image Source: Google

ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகளைக் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இரு வருடங்களுக்கு ஒருமுறை நடைபெறும் ஆஷஸ் தொடர், இந்த வருடம் ஆஸ்திரேலியாவில் நடைபெறுகிறது. 

இதில் பிரிஸ்பேனில் நடைபெற்ற முதல் டெஸ்டை ஆஸி. அணி எளிதாக வென்றது. இந்நிலையில் 2ஆவது டெஸ்ட், பகலிரவு ஆட்டமாக அடிலெய்டில் நாளை (டிசம்பர் 16) நடைபெறவுள்ளது. 

ஆஸ்திரேலிய அணியில் ஹேசில்வுட்டுக்குப் பதிலாக மற்றொரு வேகப்பந்து வீச்சாளர் ஜெய் ரிச்சர்ட்சன் ஆஸி. அணியில் இடம்பெறுவார் என கேப்டன் கம்மின்ஸ் அறிவித்துள்ளார்.

இந்நிலையில் பகலிரவு டெஸ்டுக்கான 12 பேர் கொண்ட இங்கிலாந்து அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஸ்டூவர்ட் பிராட், ஆண்டர்சன் ஆகியோர் இங்கிலாந்து அணியில் இடம்பிடித்துள்ளார்கள். மார்க் வுட் இடம்பெறவில்லை. 

இங்கிலாந்து அணி: ரூட் (கேப்டன்), பர்ன்ஸ், ஹமீது, மலான், ஸ்டோக்ஸ், போப், பட்லர் (விக்கெட் கீப்பர்), வோக்ஸ், ராபின்சன், லீச், பிராட், ஆண்டர்சன். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை