வாசிம் அக்ரம், முரளிதரன் சாதனைகளை முறியடிக்க காத்திருக்கும் பும்ரா

Updated: Sun, Jul 20 2025 23:05 IST
Image Source: Google

Jasprit Bumrah Records: மான்செஸ்டரில் நடைபெற இருக்கும் டெஸ்ட் போட்டியின் மூலம் இந்திய அணி வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா முன்னாள் வீரர்களான வாசிம் அக்ரம் மற்றும் முத்தையா முரளிதரன் சாதனையை முறியடிக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். 

இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையேயான ஆண்டர்சன் - டெண்டுல்கர் கோப்பை டெஸ்ட் தொடரின் 4ஆவது போட்டி எதிர்வரும் ஜூலை 23ஆம் தேதி மான்செஸ்டரில் உள்ள ஓல்ட் டிராஃபோர்ட் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. தற்சமயம் இங்கிலாந்து அணி இத்தொடரில் 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகித்து வரும் நிலையில், இப்போட்டியிலும் வெற்றிபெற்று தொடரை கைப்பற்றும் முனைப்பில் விளையாடவுள்ளது. 

இந்நிலையில் இப்போட்டியின் மூலம் இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா முன்னாள் ஜாம்பவான்கள் இம்ரான் கான் மற்றும் முத்தையா முரளிதரன் உள்ளிட்டோரின் சாதனைகளை முறியடிக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். அதன்படி இப்போட்டியில் ஜஸ்பிரித் பும்ரா மேலும் 5 விக்கெட்டுகளை கைப்பற்றும் பட்சத்தில் இங்கிலாந்தில் அதிக விக்கெட்டுக்ளை கைப்பாற்றிய ஆசிய வீரர் எனும் பெருமையைப் பெறுவார். 

தற்சமயம் பாகிஸ்தான் அணியின் முன்னாஅள் கேப்டன் வாசிம் அக்ரம் இங்கிலாந்தில் 14 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 53 விக்கெட்டுகளை கைப்பற்றியதே சாதனையாக உள்ளது. அதேசயம் ஜஸ்பிரித் பும்ராவைப் பொறுத்தவரையில் இங்கிலாந்தில் இதுவ்ரை 11 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 49 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். இதனை அவர் எட்டும் பட்சத்தில் இங்கிலாந்தில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய ஆசிய பந்து வீச்சாளர் என்ற பெருமையைப் பெறுவார்.

இதுதவிர்த்து இப்போட்டியில் அவர் ஒரு இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளை கைப்பற்றும் பட்சத்தில், இங்கிலாந்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளில் ஒரு இன்னிங்ஸில் அதிக முறை 5 விக்கெட்டுகளை கைப்பற்றிய ஆசிய வீரர் எனும் முத்தையா முரளிதரன் சாதனையை சமன்செய்வார். இலங்கையின் முத்தையா முரளிதரனின் 6 போட்டிகளில் 5 முறை ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள நிலையில், ஜஸ்பிரித் பும்ரா இதுவரை 11 போட்டிகளில் 4 முறை ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Also Read: LIVE Cricket Score

இந்திய டெஸ்ட் அணி: ஷுப்மன் கில் (கேப்டன்), ரிஷப் பந்த் (துணைக்கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், கேஎல் ராகுல், சாய் சுதர்ஷன், அபிமன்யு ஈஸ்வரன், கருண் நாயர், நிதிஷ் குமார் ரெட்டி, ரவீந்திர ஜடேஜா, துருவ் ஜூரல், வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாக்கூர், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா, ஆகாஷ் தீப், அர்ஷ்தீப் சிங், குல்தீப் யாதவ்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை