இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி நாட்டிங்ஹாமில் நடைபெற்று முடிந்தது. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த அணியானது ஒல்லி போப், பென் டக்கெட், கேப்டன் பென் ஸ்டோக்ஸ் ஆகியோரது அதிரடியான ஆட்டத்தின் மூலம் முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தாலும் 416 ரன்களைக் குவித்தது. இதில் அதிகபட்சமாக ஒல்லி போப் 121 ரன்களையும், பென் டக்கெட் 71 ரன்களையும், கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 69 ரன்களையும் குவித்தனர். வெஸ்ட் இண்டீஸ் அணி தரப்பில் அல்ஸாரி ஜோசப் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

Advertisement

இதனையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியானது கேவம் ஹாட்ஜின் சதத்தின் மூலமும் அலிக் அதானாஸ், ஜோஷுவா டா சில்வா ஆகியோரது அரைசதத்தின் மூலமாக வெஸ்ட் இண்டீஸ் அணியானது முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 457 ரன்களைக் குவித்தது. இதில் அதிகபட்சமாக கேவ்ம் ஹாட்ஜ் 120 ரன்களையும், அலிக் அதானாஸ் 82 ரன்களையும், இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஜோஷுவா டா சில்வா 82 ரன்களைக் குவித்தனர். இங்கிலாந்து அணி தரப்பில் கிறிஸ் வோக்ஸ் 4 விக்கெட்டுகளையும், கஸ் அட்கின்சன், ஷோயப் பஷீர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

Advertisement

பின்னர் 41 ரன்கள் பின் தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய இங்கிலாந்து அணியில் நட்சத்திர வீரர்கள் ஜோ ரூட் மற்றும் ஹாரி ப்ரூக் ஆகியோர் சதமடித்து அசத்தினர். இதன்மூலம் இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்ஸில் 425 ரன்களை குவித்த நிலையில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதில் அதிகபட்சமாக ஜோ ரூட் 122 ரன்களையும், ஹாரி ப்ரூக் 109 ரன்களையும், பென் டக்கெட் 76 ரன்களையும் சேர்த்தனர். விண்டீஸ் தரப்பில் ஜெய்டன் சீல்ஸ் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதன்மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு 385 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. 

ஆனால் இலக்கை நோக்கி களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியில் கேப்டன் கிரெக் பிராத்வைட் 47 ரன்களையு, ஜேசன் ஹோல்டர் 37 ரன்களையும் சேர்த்ததைத் தவிர்த்து மற்ற அனைத்து வீரர்களும் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்தர். இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணி இரண்டாவது இன்னிங்ஸில் 143 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இங்கிலாந்து தரப்பில் அபாரமாக பந்துவீசிய சோயப் பஷீர் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதன்மூலம் இங்கிலாந்து அணி 241 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தியதுடன், 2-0 என்ற கணக்கில் தொடரையும் கைப்பற்றி அசத்தியது.

இந்நிலையில் இப்போட்டியில் இங்கிலாந்து அணி வீரர் ஜோ ரூட் சதமடித்து அசத்தியதன் மூலம் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் சில சாதனைகளையும் படைத்து அசத்தியுள்ளார். அதன்படி, இப்போட்டியில் சதமடித்ததன் மூலம் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் ஜோ ரூட் தனது 32ஆவது சதத்தைப் பதிவுசெய்தார். இதன்மூலம் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் கேன் வில்லியம்சன், ஸ்டிவ் ஸ்மித் ஆகியோரது சத சாதனையை சமன்செய்ததுடன், சர்வதேச டெஸ் கிரிக்கெட்டில் அதிக சதங்களை விளாசிய 11ஆவது வீரர் எனும் பெருமையையும் தன்வசப்படுத்தியுள்ளார். 

மேற்கொண்டு இப்போட்டியில் ஜோ ரூட் இரண்டு இன்னிங்ஸிலும் சேர்த்து 136 ரன்களைச் சேர்த்துள்ளார். இதன்மூலம் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்களை விளாசிய வீரர்கள் பட்டியலில் இலங்கை அணியின் முன்னாள் வீரர் மஹிலா ஜெயவர்த்னே, வெஸ்ட் இண்டீஸின் சந்தர்பால் ஆகியோரது வாழ்நாள் சாதனையை முறியடித்து 8ஆம் இடத்திற்கு முன்னேறியுள்ளார். அதன்படி இதுவரை 142 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள ஜோ ரூட் 32 சதங்கள் மற்றும் 62 அரைசதங்கள் என 11,940 ரன்களை குவித்து அசத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News