இலங்கை டெஸ்ட் தொடரில் சில சாதனைகளை தகர்க்க காத்திருக்கும் ஜோ ரூட்!

Updated: Tue, Aug 20 2024 11:46 IST
Image Source: Google

இலங்கை அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டியான்னது நாளை மான்செஸ்டரில் உள்ள ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இப்போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றன. மேலும் இப்போட்டிக்கான இங்கிலாந்து அணியின் பிளேயிங் லெவனும் நேற்றைய தினம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இப்போட்டிக்கான இங்கிலாந்து அணியின் பிளேயிங் லெவனில் நட்சத்திர வீரர் ஜோ ரூட் இடம்பிடித்துள்ளார். இந்நிலையில் நாளைய போட்டியில் ஜோ ரூட் சில் சாதனைகளை முறியக்கும் வாய்ப்பினைப் பெற்றுள்ளார். 

கிறிஸ் கெயிலின் வாழ்நாள் சாதனையை முறியடிக்கும் வாய்ப்பு

இலங்கை அணிக்கு எதிரான இந்தப் போட்டியில் ஜோ ரூட் 152 ரன்களைச் சேர்க்கும் பட்சத்தில், சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் கிறிஸ் கெயிலை பின்னுக்குத் தள்ளி 13ஆவது இடத்தைப் பெறுவார். ஜோ ரூட் இதுவரை 346 போட்டிகளில் விளையாடி 451 இன்னிங்ஸ்களில் 19,442 ரன்கள் எடுத்துள்ளார். கிறிஸ் கெய்ல் 483 போட்டிகளில் 551 இன்னிங்ஸில் 19,593 ரன்களை எடுத்து தற்போது 13ஆவது இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இங்கிலாந்து அணிக்காக அதிக டெஸ்ட் சதம் 

இந்தப் போட்டியில் ஜோ ரூட் சதம் அடிக்கும் பட்சத்தில், சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இங்கிலாந்து அணிக்காக அதிக சதங்கள் அடித்தவர் என்ற அடிப்படையில் அவர் கூட்டாக முதல் இடத்தை பிடிப்பார். ஜோ ரூட்டின் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் கேரியரில் இதுவரை 32 சதங்களை அடித்துள்ளார். அதேசமயம் அந்த அணியின் முன்னாள் கேப்டன் அலெஸ்டர் குக் 33 சதங்களுடன் முதலிடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

ராகுல் டிராவிட் சாதனையை முறியடிக்க வாய்ப்பு

Also Read: Akram ‘hopes’ Indian Team Will Travel To Pakistan For 2025 Champions Trophy

மேற்கொண்டு இப்போட்டியில் ஜோ ரூட் அரைசதம் அடிக்கும் பட்சத்தில் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக அரைசதங்களை விளாசிய வீரர்களில் ராகுல் டிராவிட், ஆலன் பார்டரை ஆகியோரை முந்தி அதிக அரைசதம் அடித்த வீரர்கள் பட்டியலில் மூன்றாவது இடத்தை பிடிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது வரை இவர்கள் மூவரும், தலா 63 அரை சதங்களுடன் கூட்டாக மூன்றாவது இடத்தில் உள்ளனர். அதேசமயம் இந்த பட்டியலில் இந்திய அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் (68), வெஸ்ட் இண்டீஸின் ஷிவ்நரைன் சந்தர்பால் (66) ஆகியோர் முதல் இரண்டு இடங்களில் உள்ளது குறிப்பிடத்தக்கது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை