Joe Root Record: ஹெடிங்லேவில் நடைபெற்று வரும் இந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியி இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் 28 ரன்களை மட்டுமே எடுத்து விக்கெட்டை இழந்திருந்தாலும் சர்வதேச கிரிக்கெட்டில் சில சாதனைகளை படைத்துள்ளார். 

Advertisement

ஹெடிங்லே டெஸ்டின் இரண்டாவது நாள் ஆட்டத்தின் இறுதியில் இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரர் ஜோ ரூட் 58 பந்துகளில் 2 பவுண்டரிகளுடன் 28 ரன்கள் மட்டுமே எடுத்திருந்த நிலையில் ஜஸ்பிரித் பும்ரா பந்துவீச்சில் கருண் நாயரிடம் கேட்ச் கொடுத்து விக்கெட்டை இழந்தார். இப்போட்டியில் ஜோ ரூட் பெரிய ரன்களைக் குவிக்கவில்லை என்றாலும் சச்சின் டெண்டுல்கர், சனத் ஜெயசூர்யா போன்ற ஜாம்பவான்களின் சாதனையை முறியடித்து அசத்தியுள்ளார். 

Advertisement

சச்சின் டெண்டுல்கரின் சாதனை முறியடிப்பு

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் 28 ரன்கள் எடுத்த பிறகு, ஜோ ரூட் இங்கிலாந்து நிலைமைகளில் இந்தியாவுக்கு எதிராக 16 டெஸ்ட் போட்டிகளில் 26 இன்னிங்ஸ்களில் 1602 ரன்கள் எடுத்துள்ளார். இதன் மூலம் அவர் இங்கிலாந்தில் இந்தியா மற்றும் இங்கிலாந்து டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்த சாதனையை படைத்துள்ளார். முன்னதாக சச்சின் டெண்டுல்கர் 30 இன்னிங்ஸ்களில் 1575 ரன்களை எடுத்ததேச சாதனையாக இருந்தது குறிப்பிடத்தக்கது. 

இந்தியா vs இங்கிலாந்து டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன்கள் (இங்கிலாந்தில்)

  • ஜோ ரூட் - 26 இன்னிங்ஸ்களில் 1602 ரன்கள்
  • சச்சின் டெண்டுல்கர் - 30 இன்னிங்ஸ்களில் 1575 ரன்கள்
  • ராகுல் டிராவிட் - 23 இன்னிங்ஸ்களில் 1376 ரன்கள்
  • அலஸ்டர் குக் - 23 இன்னிங்ஸ்களில் 1196 ரன்கள்
  • சுனில் கவாஸ்கர் - 28 இன்னிங்ஸ்களில் 1152 ரன்கள்

சனத் ஜெயசூர்யா சாதனையை முறியடித்த ஜோ ரூட்

Advertisement

இதுதவிர்த்து சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்த வீரர்களின் பட்டியலில் இலங்கை அணியின் முன்னாள் ஜாம்பவான் சனத் ஜெயசூர்யாவை முந்தி ஜோ ரூட் ஒன்பதாவது இடத்தைப் பிடித்துள்ளார். ம்ன்னதாக ஜெயசூர்யா 586 போட்டிகளில் 651 இன்னிங்ஸ்களில் விளையாடி 21,032 ரன்களைச் சேர்த்து 9ஆம் இடத்தில் இருந்த நிலையில், தற்போது ஜோ ரூட் 366 போட்டிகளில் 479 இன்னிங்ஸ்களில் 21,053 ரன்கள் எடுத்து அசத்தியுள்ளார்.

Also Read: LIVE Cricket Score

இப்போட்டி குறித்து பேசினல் இரண்டாவது நாள் ஆட்டநேர முடிவில், இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 3 விக்கெட் இழப்புக்கு 209 ரன்கள் எடுத்துள்ளது. இதில் ஒல்லி போப் 100 ரன்களுடனும், ஹாரி புரூக் ரன்கள் ஏதுமின்றியும் களத்தில் உள்ளனர். இந்திய அணி தரப்பில் ஜஸ்பிரித் பும்ரா 3 விக்கெட்டுகளை வீழ்த்தியதை தவிர்த்து மற்ற வீரர்கள் சோபிக்க தவறினர். இதனையடுத்து 262 ரன்கள் பின் தங்கிய நிலையில் இங்கிலாந்து அணி நாளை மூன்றாம் நாள் அட்டத்தை தொடரவுள்ளது.

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News