அறுவை சிகிச்சை மேற்கொள்ளும் ஆர்ச்சர்!

Updated: Fri, May 21 2021 09:42 IST
Image Source: Google

இங்கிலாந்து அணியின் அதிவேக பந்துவீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சர். இவர் இந்திய அணிக்கெதிரான தொடரின் போது ஏற்பட்ட காயம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்தார். 

இதன் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட நடப்பாண்டு ஐபிஎல் தொடரிலும் அவர் விளையாடாமல் விலகினார். அதன்பின் தற்போது தான் காயத்திலிருந்து குணமடைந்த ஆர்ச்சர், இங்கிலாந்து கவுண்டி அணியான சசெக்ஸ் அணிக்காக விளையாடத் தொடங்கினார். 

இந்நிலையில் அத்தொடரின் போது ஆர்ச்சர் மீண்டும் தனது முட்டி பகுதியில் காயமடைந்தார். இதனையடுத்து அவர், நியூசிலாந்து அணிக்கெதிரான டெஸ்ட் தொடரிலிருந்து விலகினார்.

இதற்கிடையில் ஆர்ச்சரின் காயம் அதீதமாகவே, அவருக்கு தற்போது அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. 

இதுகுறித்து இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,“ஜோஃப்ரா ஆர்ச்சரின் முழங்கை முட்டியில் ஏற்பட்டுள்ள காயம் தீவிரமடைந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்ததை அடுத்து, அவருக்கு நாளை அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட உள்ளது” என்று தெரிவித்துள்ளது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை