தி ஹண்ட்ரட் 2024: ஸாம்பா, ஜோர்டன் அசத்தல்; ஓவல் இன்விசிபில் அபார வெற்றி!

Updated: Sun, Aug 11 2024 22:54 IST
Image Source: Google

இங்கிலாந்தில் நடைபெற்றுவரும் தி ஹண்ட்ரட் கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரில் இன்று நடைபெற்ற 26ஆவது லீக் போட்டியில் ஓவல் இன்விசிபில் மற்றும் லண்டன் ஸ்பிரிட் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. லண்டனில் உள்ள கென்னிடன் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற ஓவல் இன்விசிபில் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து லண்டன் ஸ்பிரிட் அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. 

அதன்படி களமிறங்கிய லண்டன் ஸ்பிரிட் அணியானது தொடக்கம் முதலே சீரான இடைவேளையில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதன்படி அந்த அணியில் தொடக்க வீரராக களமிறங்கிய மைக்கேல் பெப்பர் 27 ரன்களில் விக்கெட்டை இழந்தார். ஆனால் மறுபக்கம் களமிறங்கிய ஜென்னிங்ஸ், ஒல்லி போப், ஹெட்மையர், டேனியல் லாரன்ஸ், ஆண்ட்ரே ரஸல் உள்ளிட்ட நட்சத்திர வீரர்களும் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர்.

இதானால் 92 பந்துகளிலேயே லண்டன் ஸ்பிரிட் அணி அனைத்து விக்கெட்டுகாளையும் இழந்து 96 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஓவல் அணி தரப்பில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய ஆடம் ஸாம்பா 4 விக்கெட்டுகளையும், சாம் கரண் 3 விக்கெட்டுகளையும், டாம் கரண் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினர். அதன்பின் இலக்கை நோக்கி விளையாடிய ஓவல் அணியில் தொடக்க வீரர் வில் ஜேக்ஸ் 2 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். 

அதன்பின் டேவிட் மாலனுடன் இணைந்த ஜோர்டன் காக்ஸ் அதிரடியாக விளையாடியதுடன் பவுண்டரிகளையும், சிக்ஸர்களையும் பறக்கவிட்டு தனது அரைசதத்தைப் பதிவுசெய்து மிரட்டினார். மேற்கொண்டு இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஜோர்டன் காக்ஸ் 9 பவுண்டரிகள் 2 சிக்ஸர்கள் என 61 ரன்களையும், டேவிட் மாலன் 4 பவுண்டரிகளுடன் 29 ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர்.

Also Read: Akram ‘hopes’ Indian Team Will Travel To Pakistan For 2025 Champions Trophy

இதன்மூலம் ஓவல் இன்விசிபிள் அணி 63 பந்துகளில் இலக்கை எட்டியதுடன் 9 விக்கெட் வித்தியாசத்தில் லண்டன் ஸ்பிரிட் அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. மேலும் இப்போட்டியில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய ஆடம் ஸாம்பா ஆட்டநாயகன் விருதினை வென்றார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை