முல்லன்பூரில் நேற்று நடைபெற்ற முதல் குவாலிஃபையர் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் பாஞ்சாப் கிங்ஸை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியதுடன் இறுதிப்போட்டிக்கும் முன்னேறி அசத்தியுள்ளது. 

Advertisement

இதன்மூலம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியானது ஐபிஎல் தொடர் வரலாற்றில் 4ஆவது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறி சாதித்துள்ளது. அதேசமயம் இப்போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி தோல்வியைத் தழுவி இருந்தாலும், இரண்டாவது குவாலிஃபையர் ஆட்டத்தில் விளையாடும் வாய்ப்பைப் பெற்றுள்ளது. மேலும் இப்போட்டியில் ஆர்சிபி அணி தரப்பில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய சுயாஷ் சர்மா ஆட்டநாயகன் விருதை வென்றார்.

Advertisement

இந்நிலையில் இப்போட்டியில் ஆர்சிபி அணி தரப்பில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய ஜோஷ் ஹேசில்வுட் 3 விக்கெட்டுகளை கைப்பற்றியதுடன் சில சாதனைகளையும் படைத்துள்ளார். அதன்படி ஐபிஎல் பிளே ஆஃப் போட்டிகளில் ஆர்சிபி அணிக்காக அதிகமுறை 3 விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் எனும் அனில் கும்ப்ளேவின் சாதனையை ஜோஷ் ஹேசில்வுட் சமன்செய்து அசத்தியுள்ளார். இருவரும் தலா 2 முறை 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியுள்ளனர். 

ஐபிஎல் பிளேஆஃப்களில் ஆர்சிபி அணிக்காக அதிக 3 விக்கெட்டுகள் வீழ்த்தியவர்கள்

  • 2* : ஜோஷ் ஹேசில்வுட்
  • 2 : அனில் கும்ப்ளே
  • 1* : சுயாஷ் சர்மா
  • 1 : கிறிஸ் ஜோர்டான்
  • 1 : டேனியல் வெட்டோரி
  • 1 : ஷேன் வாட்சன் 

ஐபிஎல் பிளே ஆஃப் சுற்றில் அதிக முறை 3 விக்கெட்டுகள் வீழ்த்திய வெளிநாட்டு வீரர்கள்

இதுதவிர்த்து ஐபிஎல் தொடரில் அதிக முறை 3 விக்கெட்டுகளை வீழ்த்தி வெளிநாட்டு வீரர்கள் பட்டியலிலும் ஜோஷ் ஹேசில்வுட் கூட்டாக இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளார். அதன்படி ரியான் ஹாரிஸ், ஷேன் வாட்சன் மற்றும் ட்ரெண்ட் போல்ட் ஆகியோரின் சாதனைகளை ஜோஷ் ஹேசில்வுட் சமன்செய்துள்ளார். இந்த பட்டியலில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரர் டுவைன் பிராவோ மூன்று முறை 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி முதலிடத்தில் உள்ளார். 

  • 3 - டுவைன் பிராவோ
  • 2* - ஜோஷ் ஹேசில்வுட்
  • 2 - ரியான் ஹாரிஸ்
  • 2 - ஷேன் வாட்சன்
  • 2 - ட்ரெண்ட் போல்ட்
Advertisement

ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் ஹேசில்வுட் தற்போதைய ஐபிஎல் சீசனில் தனது பந்துவீச்சில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறார், மேலும் இந்த சீசனில் ஆர்சிபி அணிக்காக இதுவரை 11 போட்டிகளில் விளையாடிவுள்ள அவர் 21 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். மேலும் நடப்பு ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணியின் வெற்றிகரமான பந்துவீச்சாளராகவும் உள்ளார். மேலும் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர்கள் பட்டியலில் நூர் அகமது மற்றும் பிரசித் கிருஷ்ணாவுக்குப் பிறகு மூன்றாவது இடத்தில் உள்ளார்.

Also Read: LIVE Cricket Score

இப்போட்டி குறித்து பேசினால் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணியானது எதிரணி பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் 14.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்ததுடன் 101 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதன் பின் இலக்கை நோக்கி களமிறங்கிய ஆர்சிபி அணி 10 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது குறிப்பிடத்தக்கது.

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News