பந்துவீச்சாளர்களுக்கு எந்த ஆதரவும் கிடைக்கவில்லை - ஜஸ்பிரித் பும்ரா!

Updated: Tue, Apr 08 2025 10:55 IST
Image Source: Google

ஐபிஎல் தொடரில் நெற்று நடைபெற்ற லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்தின. மும்பையில் உள்ள வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.

அதன்படி களமிறங்கிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் விராட் கோலி 67 ரன்களையும், கேப்டன் ரஜத் பட்டிதார் 64 ரன்களிலும் விக்கெட்டை இழக்க, இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஜித்தேஷ் சர்மா 40 ரன்களைச் சேர்த்து அணிக்கு தேவையான ஃபினிஷிங்கைக்  கொடுத்தார்.  இதன்மூலம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 221 ரன்களைச் சேர்த்தது. மும்பை தரப்பில் ஹர்திக் பாண்டியா, டிரென்ட் போல்ட் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். 

பின்னர் இலக்கை நோக்கி விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணியில் டாப் ஆர்டர் வீரர்கள் சோபிக்க தவறினர். அந்த அணியின் திலக் வர்மா 56 ரன்களையும், கேப்டன் ஹர்திக் பாண்டியா 42 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் சோபிக்க தவற, 20 ஓவர்கள் முடிவில் அந்த அணி 9 விக்கெட் இழப்பிற்கு 209 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன்மூலம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸை வீழ்த்தி வெற்றிபெற்றது. 

இந்நிலையில் இந்த தோல்வி குறித்து பேசிய ஹர்திக் பாண்டியா, “இந்த போட்டி ஒரு ரன் விருந்தாக அமைந்தது. இந்த விக்கெட் உண்மையிலேயே நன்றாக இருந்தது. மீண்டும் நாங்கள் இரண்டு ஹிட்களில் தோல்வியடைந்தோம் என்று நினைக்கிறேன். இந்த போட்டி குறித்து எனக்குச் சொல்ல அதிகம் இல்லை. விக்கெட் இருந்த விதத்தைப் பொறுத்தவரை, இங்கு பந்துவீச்சாளர்களுக்கு எந்த ஆதரவும் கிடைக்கவில்லை. அதனால் இந்த இலக்கான எட்டக்கூடிய ஒன்று தான் என்று நினைத்தோம்.

இன்றைய ஆட்டத்தில் திலக் வர்மா சிறப்பாக செயல்பட்டார். கடைசி ஆட்டத்தில், நிறைய விஷயங்கள் நடந்தன. மக்கள் இதைப் பற்றி நிறைய விஷயங்களைச் சொன்னார்கள், ஆனால் முந்தைய நாள் அவருக்கு மிகவும் மோசமான இருந்தது என்பது மக்களுக்குத் தெரியாது. இன்று, சிறப்பாக இருந்தர். இதுபோன்ற ஹை ஸ்கோரிங் ஆட்டத்தில் பவர்பிளேவில் அதிரடியாக செயல்படுவது முக்கியம். அதன் காரணமாக இறுதியில் எங்களால் போதிய ரன்களைச் சேர்க்க முடியவில்லை.

Also Read: Funding To Save Test Cricket

ஜஸ்பிரித் பும்ரா போன்ற வீரர் இருக்கும் போது எந்த அணியும் உலகின் சிறப்பான ஒரு அணியாக மாறுகிறது. அவர் உள்ளே வந்து தனது வேலையைச் செய்தார், அவரைப் மீண்டும் அணியில் பார்ப்பதில் மிகவும் மகிழ்ச்சி. வாழ்க்கையில், ஒருபோதும் பின்வாங்காதீர்கள், எப்போதும் அதன் நேர்மறையான பக்கத்தைப் பாருங்கள். நாங்கள் அணியில் உள்ள அனைவரையும் ஆதரவளிக்கிறோம், முடிவு எங்கள் வழியில் வரும் என்று நம்புகிறோம்” என்று தெரிவித்துள்ளார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை