Kagiso Rabada Record: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியின் மூலம் தென் அப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் காகிசோ ரபாடா சிறப்பு சாதனையைப் படைத்துள்ளார். 

Advertisement

லார்ட்ஸ் கிரிக்கெட் மைதனத்தில் நடைபெற்று வரும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி சுவாரஸ்யத்திற்கு பஞ்சமில்லாமல் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 212 ரன்களையும், தென் ஆப்பிரிக்க அணி 138 ரன்னிலும் என ஆல் அவுட்டானது. இதையடுத்து 74 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை விளையாடி வரும் ஆஸ்திரேலிய அணியானது 8 விக்கெட் இழப்பிற்கு 214 ரன்களைச் சேர்த்துள்ளது. 

Advertisement

இந்நிலையில் இப்போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் தென் ஆப்பிரிக்க வேகப்பந்துவீச்சாளர் காகிசோ ரபாடா 3 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் அணியின் முன்னாள் வீரர் ஜாக் காலிஸின் சாதனையை முறியடித்துள்ளார். அந்தவகையில் இந்த இன்னிங்ஸில் ரபாடா 3 விக்கெட்டுகளை கைப்பற்றியதன் மூலம் சர்வதேச தென் ஆப்பிரிக்க அணிக்காக அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய 5ஆவது வீரர் எனும் பெருமையைப் பெற்றுள்ளார். 

முன்னதாக அந்த அணியின் முன்னாள் வீரர் ஜாக் காலிஸ் 513 போட்டிகளில் 572 விக்கெட்டுகளை வீழ்த்தி ஐந்தாம் இடத்தில் இருந்த நிலையில் காகிசோ ரபாடா 242 போட்டிகளில் 574 விக்கெட்டுகளை கைப்பற்றி 5ஆம் இடத்திற்கு முன்னேறியுள்ளார். இந்தப் பட்டியலில் தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் வீரர் ஷான் பொல்லாக் 414 போட்டிகளில் 504 இன்னிங்ஸ்களில் 823 விக்கெட்டுகளை வீழ்த்தி முதலிடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தென் ஆப்பிரிக்க அணிக்காக அதிக விக்கெட்டுகள்

  • 823 - ஷான் போலாக் (504 இன்னிங்ஸ்)
  • 697 - டேல் ஸ்டெய்ன் (340 இன்னிங்ஸ்)
  • 661 - மகாயா நிடினி (370 இன்னிங்ஸ்)
  • 602 - ஆலன் டொனால்ட் (291 இன்னிங்ஸ்)
  • 574 - காகிசோ ரபடா (299 இன்னிங்ஸ்)
  • 572 - ஜாக் காலிஸ் (568 இன்னிங்ஸ்)

தென் அப்பிரிக்க பிளேயிங் லெவன்: ஐடன் மார்க்ரம், ரியான் ரிக்கல்டன், வியான் முல்டர், டெம்பா பவுமா (கேட்ச்), டிரிஸ்டன் ஸ்டப்ஸ், டேவிட் பெடிங்ஹாம், கைல் வெர்ரேய்ன், மார்கோ ஜான்சன், கேசவ் மகாராஜ், ககிசோ ரபாடா, லுங்கி இங்கிடி

Advertisement

Also Read: LIVE Cricket Score

ஆஸ்திரேலியா பிளேயிங் லெவன்: உஸ்மான் கவாஜா, மார்னஸ் லபுஷாக்னே, கேமரூன் கிரீன், ஸ்டீவ் ஸ்மித், டிராவிஸ் ஹெட், பியூ வெப்ஸ்டர், அலெக்ஸ் கேரி, பாட் கம்மின்ஸ் (கேப்டன்), மிட்செல் ஸ்டார்க், நாதன் லியோன், ஜோஷ் ஹேசில்வுட்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News