இலங்கை அணி சமீபத்தில் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இந்த தொடரின் முதலிரண்டு போட்டிகளிலும் இங்கிலாந்து அணி வெற்றிபெற்று தொடரை கைப்பற்றிய நிலையில், மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் இலங்கை அணியானது அபார வெற்றியைப் பெற்றதுடன, டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் முடித்து அசத்தியது. 

Advertisement

இதனையடுத்து இலங்கை அணி தங்களுடைய சொந்த மண்ணில் நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. அதன்படி, செப்டம்பர் 18 முதல் 22ஆம் தேதி வரை முதல் டெஸ்ட் போட்டியிலும், செப்டம்பர் 26 முதல் 30ஆம் தேதிவரையிலும் விளையாடவுள்ளது. மேலும் இத்தொடரின் இரண்டு டெஸ்ட் போட்டிகளும் கலேவில் நடைபெறவுள்ளது. மேலும் இது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் அங்கமாக நடைபெறவுள்ளதால் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன.

Advertisement

மேலும் இத்தொடருக்கன் நியூசிலாந்து அணி கடந்த மாதமே அறிவிக்கப்பட்ட நிலையில், இன்றைய தினம் இலங்கை டெஸ்ட் அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. இரு அணிகளிலும் நட்சத்திர வீரர்கள் இடம்பிடித்திருப்பதால் இத்தொடரில் எந்த அணி வெற்றிபெற்று தொடரை வெல்லும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. இந்நிலையில் இத்தொடரில் விளையாடும் நியூசிலாந்து வீரர் கேன் வில்லியம்சன் புது சாதனை படைக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. 

அதன்படி இந்தப் போட்டியில் கேன் வில்லியம்சன் 72 ரன்கள் எடுக்கும் பட்சத்தில் நியூசிலாந்து அணிக்காக சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்த வீரர் என்ற சாதனையை அவர் தன்வசப்படுத்துவார். தற்போது, ​​இந்த பட்டியலில் அந்த அணியின் முன்னாள் வீரர் ராஸ் டெல்யர் 450 போட்டிகளில் 510 இன்னிங்ஸ்களில் விளையாடு 18,199 ரன்கள் எடுத்து முதலிடத்தில் உள்ளார். அதேசமயம் வில்லியம்சன் 358 போட்டிகளில் விளையாடி 423 இன்னிங்ஸ்களில் 18,128 ரன்களை எடுத்துள்ளார்.

மேற்கொண்டு இலங்கை அணிக்கு எதிரான இந்த டெஸ்ட் தொடரில் கேன் வில்லியம்சன் சதமடிக்கும் பட்சத்தில் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சதம் அடித்த வீரர்கள் பட்டியலில் அவர் கூட்டாக 11ஆவது இடத்தைப் பெறுவார். தற்போது இந்த பட்டியலில் இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் அலஸ்டர் குக் 33 சதங்களுடம் 11ஆவது இடத்திலும், வில்லியம்சன் 32 சதங்களுடனும் 12ஆவது இடத்திலும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இலங்கை டெஸ்ட் அணி: தனஞ்சய் டி சில்வா (கேப்டன்), திமுத் கருணாரத்ன, பதும் நிஷங்க, குசால் மெண்டிஸ், ஏஞ்சலோ மேத்யூஸ், தினேஷ் சந்திமால், கமிந்து மெண்டிஸ், சதீர சமரவிக்ரம, ஓஷதா ஃபெர்னாண்டோ, அசிதா ஃபெர்னாண்டோ, விஷ்வா ஃபெர்னாண்டோ, லஹிரு குமார, பிரபாத் ஜயசூரிய, ரமேஷ் மெண்டிஸ், ஜெப்ரி வான்டர்சே, மிலன் ரத்நாயக்க.

Advertisement

நியூசிலாந்து டெஸ்ட் அணி: டிம் சௌதீ (கே), டாம் பிளென்டல், மைக்கேல் பிரேஸ்வெல், டெவான் கான்வே, மேட் ஹென்றி, டாம் லேதம், டேரில் மிட்செல், வில்லியம் ஓ ரூர்க், அஜாஸ் படேல், கிளென் பிலிப்ஸ், ரச்சின் ரவீந்திரா, மிட்செல் சான்ட்னர், பென் சியர்ஸ், கேன் வில்லியம்சன், வில் யங்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News