ஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானது ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து முடிந்தது. இத்தொடரின் இறுதிப்போட்டியில் தென் ஆப்பிரிக்க மகளிர் அணியானது நியூசிலாந்திடம் தோல்வியைத் தழுவியதுடன் கோப்பையை வெல்லும் வாய்ப்பை மீண்டும் ஒருமுறை தவறவிட்டது. 

Advertisement

இதனைத்தொடர்ந்து தென் ஆப்பிரிக்க அணி அடுத்ததாக இங்கிலாந்து அணியுடன் சொந்த மண்ணில் மூன்று போட்டிகளை கொண்ட டி20 மற்றும் ஒருநாள் தொடரிலும், ஒரே ஒரு டெஸ்ட் போட்டி கொண்ட தொடரிலும் விளையாடவுள்ளது. அதன்படி இரு அணிகளுக்கும் இடையேயான இந்த தொடரானது எதிவரும் நவம்பர் மாதம் 24ஆம் தேதி முதல் நடைபெறவுள்ளது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான டி20 தொடர் நவம்பர் 24ஆம் தேதி தொடங்கவுள்ளது. 

Advertisement

அதேசமயம் ஒருநாள் தொடரானது டிசம்பர் 04ஆம் தேதி முதலும், ஒரே ஒரு டெஸ்ட் போட்டியானது டிசம்பர் 15ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்நிலையில் இத்தொடருக்கான ஹீதர் நைட் தலைமையிலான இங்கிலாந்து மகளிர் அணியின் ஒருநாள், டி20 மற்றும் டெஸ்ட் அணிகளை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. இதில் ஃபிரேயா கெம்ப் மற்றும் மையா பௌச்சர் ஆகியோர் இங்கிலாந்து டெஸ்ட் அணியில் முதல் முறையாக சேர்க்கப்பட்டுள்ளார். 

இந்நிலையில் இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடும் தென் ஆப்பிரிக்க மகளிர் அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. அதேசமயம் இத்தொடருக்கு பிறகு டெஸ்ட் தொடருக்கான தென் ஆப்பிரிக்க அணியும் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்சமயம் அறிவிக்கப்பட்டுள்ள அணியின் கேப்டனாக லாரா வோல்வார்ட் தொடர்கிறார். 

அதேசமயம் இதில் டி20 தொடருக்கான தென் ஆப்பிரிக்க அணியில் நட்சத்திர வீராங்கனைகள் மரிஸான் கேப் மற்றும் அயபொங்கா காகா ஆகியோருக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அன்னேக் போஷ், தஸ்மின் பிரிட்ஸ், நதின் டி கிளார்க், அன்னேரி டெக்சர்ன், சுனே லூஸ், சோலே டிரையன் உள்ளிட்ட நட்சத்திர வீரர்கள் தங்கள் இடங்களை உறுதிசெய்துள்ளனர். இதனால் இத்தொடரில் தென் ஆப்பிரிக்க அணியின் மீதான எதிர்பார்ப்புகளும் ரசிக்ர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

தென் ஆப்பிரிக்க மகளிர் டி20 அணி: லாரா வோல்வார்ட் (கேப்டன்), அன்னேக் போஷ், தஸ்மின் பிரிட்ஸ், நதின் டி கிளர்க், அன்னேரி டெர்க்சன், அயன்டா ஹ்லுபி, சினாலோ ஜாஃப்டா, சுனே லூஸ், எலிஸ்-மாரி மார்க்ஸ், நோன்குலுலெகோ ம்லாபா, துமி செகுகுனே, நோண்டுமிசோ ஷங்கசே, க்ளோஸ் ட்ரையன் மற்றும் ஃபே டன்னிக்லிஃப்

Advertisement

தென் ஆப்பிரிக்க மகளிர் ஒருநாள் அணி: லாரா வோல்வார்ட் (கேப்டன்), அன்னேக் போஷ், தஸ்மின் பிரிட்ஸ், நதின் டி க்ளெர்க், அன்னேரி டெர்க்சன், மைக் டி ரிடர், லாரா குட்ஆல், அயன்டா ஹ்லூபி, சினாலோ ஜாஃப்டா, மரிசானே கப், அயபோங்கா காக்கா, மசபடா கிளாஸ், சுனே லூஸ், நோன்குலுலேகோ ம்லாபா, சோலே டிரையன்

இங்கிலாந்து மகளிர் டி20 அணி: ஹீதர் நைட் (கேப்டன்), லாரன் பெல், மையா பௌச்சர், சார்லி டீன், சோபியா டன்க்லி, சோஃபி எக்லெஸ்டோன், லாரன் ஃபைலர், சாரா க்ளென், பெஸ் ஹீத், ஆமி ஜோன்ஸ், ஃப்ரீயா கெம்ப், பைஜ் ஸ்கால்ஃபீல்ட், நாட் ஸ்கைவர்-பிரண்ட், லின்ஸி ஸ்மித், டேனியல் வையட்-ஹாட்ஜ்

இங்கிலாந்து மகளிர் ஒருநாள் அணி: ஹீதர் நைட் (கேப்டன்), டாமி பியூமண்ட், லாரன் பெல், மையா பௌச்சர், ஆலிஸ் கேப்ஸி, கேட் கிராஸ், சார்லி டீன், சோபியா டங்க்லி, சோஃபி எக்லெஸ்டோன், லாரன் ஃபைலர், சாரா கிளென், ஏமி ஜோன்ஸ், ஃப்ரேயா கெம்ப், நாட் ஸ்கைவர்-பிரண்ட், டேனியால் வையட்-ஹாட்ஜ்

Advertisement

இங்கிலாந்து மகளிர் டெஸ்ட் அணி: ஹீதர் நைட் (கேப்டன்), டாமி பியூமண்ட், லாரன் பெல், மையா பௌச்சர், கேட் கிராஸ், சார்லி டீன், சோபியா டங்க்லி, சோஃபி எக்லெஸ்டோன், லாரன் ஃபைலர், ஏமி ஜோன்ஸ், ஃபிரேயா கெம்ப், நாட் ஸ்கைவர்-பிரண்ட், டேனியல் வையட்-ஹாட்ஜ்

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News