Ravi Shastri India's Playing XI England 1st Test: இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடும் இந்திய அணியின் பிளேயிங் லெவனை முன்னாள் இந்திய தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தேர்வு செய்துள்ளார். 

Advertisement

எதிர்வரும் ஜூன் 20 ஆம் தேதி ஹெடிங்லேவில் உள்ள லீட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது நடைபெறவுள்ளது. இப்போட்டிக்காக இரு அணிகளும் தயாராகி வரும் நிலையில், இந்திய அணியின் பிளேயிங் லெவன் குறித்த கணிப்புகள் அதிகரித்துள்ளன. அந்தவகையில் முன்னாள் இந்திய பயிற்சியாளர் ரவி சாஸ்திரி இந்தியாவின் தனக்குப் பிடித்தமான பிளேயிங் லெவனைத் தேர்வு செய்துள்ளார்.

Advertisement

அதன்படி அவர் தேர்வு செய்த இந்த அணியின் தொடக்க வீரர்களாக யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் கேஎல் ராகுலுக்கு வாய்ப்பு கொடுத்துள்ள நிலையில், மூன்றாம் இடத்திற்கு அறிமுக வீரர் சாய் சுதர்ஷனை தேர்ந்தெடுத்துள்ளார். மேலும் அவர் அறிமுகத்திற்குத் தயாராக இருப்பதாகவும், சமீபத்தில் சிறப்பாக செயல்பட்டதாகவும் அவரைப் பொறுத்தவரை. ஐபிஎல் 2025 இல் ஆரஞ்சு தொப்பியை வென்ற சாய் குறித்து, இந்த சுற்றுப்பயணம் தனக்கு ஒரு பெரிய வாய்ப்பாக இருக்கும் என்று சாஸ்திரி கூறியுள்ளார். 

அவரைத்தொடர்ந்து 4ஆம் இடத்திற்கு ஷுப்ம்ன் கில்லை தேர்வு செய்துள்ள அவர், 5ஆம் இடத்தில் கருண் நாயருக்கு இடம் கொடுத்துள்ளார். கருண் நாயர் 7ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ளார். மேலும் உள்நாட்டு கிரிக்கெட்டில் அவர் சிறப்பாக செயல்பட்டுள்ளார். அதன் காரணமாக இந்த வாய்ப்புக்கு அவர் நிச்சயம் தகுதியானவர் தான் என்று ரவி சாஸ்திரி கூறியுள்ளார். 

அவரது அணியில் விக்கெட் கீப்பராக ரிஷப் பந்தும், ஆல் ரவுண்டர்களாக ரவீந்திர ஜடேஜா மற்றும் ஷர்தூல் தாக்கூர் ஆகியோரை அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இதுதவிர்த்து அணியின் பந்துவீச்சளர்களாக ஜஸ்பிரித் பும்ரா மற்றும் முகமது சிராஜ் ஆகியோரைத் தேர்வு செய்துள்ள அவர், மூன்றாவது வேகப்பந்து வீச்சாளருக்கான போட்டியில் பிரசித் கிருஷ்ணா மற்றும் அர்ஷ்தீப் சிங் ஆகியோர் உள்ளனர் என்று கூறியுள்ளது, தேவைக்கேற்ப அவர்களை தேர்வு செய்யலாம் என்றும் கூறியுள்ளார்.

Also Read: LIVE Cricket Score

Advertisement

ரவி சாஸ்திரி தேர்வு செய்த பிளேயிங் XI: யஷஸ்வி ஜெய்ஸ்வால், கே.எல். ராகுல், சாய் சுதர்ஷன், ஷுப்மன் கில், கருண் நாயர், ரிஷப் பந்த், ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், முகமது சிராஜ், ஜஸ்பிரித் பும்ரா, பிரசித் கிருஷ்ணா/அர்ஷ்தீப் சிங்

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News