வெஸ்ட் இண்டீஸ் அணி தற்சமயம் அயர்லாந்தில் சுற்றுப்பயணம் செய்து மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்த முதல் ஒருநாள் போட்டியில் அயர்லாந்து அணி வெற்றிபெற்ற நிலையில், இரண்டாவது போட்டி மழையால் கைவிடப்பட்டது.

Advertisement

இந்நிலையில் அயர்லாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் மூன்றாவது ஒருநாள் போட்டி இன்று டப்ளினில் உள்ள கேஷ்டல் அவென்யூவில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற அயர்லாந்து அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிர்பார்த்த தொடக்கம் கிடைக்கவில்லை. அணியின் தொடக்க வீரர்கள் பிராண்டன் கிங் ஒரு ரன்னிலும், எவின் லூயிஸ் 14 ரன்னிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர். 

Advertisement

அதன்பின் ஜோடி சேர்ந்த கேப்டன் ஷாய் ஹோப் மற்றும் கேசி கார்டி இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதொடர்ந்து தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த இருவரும் தங்களின் அரைசதங்களைப் பதிவுசெய்து அசத்தியதுடன் மூன்றாவது விக்கெட்டிற்கு 130 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். பின்னர் சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஷாய் ஹோப் 9 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள் என 75 ரன்களைச் சேர்த்த கையோடு விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய அமிர் ஜங்கூவும் 22 ரன்களில் ஆட்டமிழந்தார். 

ஒருபக்கம் விக்கெட்டுகள் வீழ்ந்த நிலையிலும் மறுமுனையில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய கேசி கார்டி இத்தொடரில் இரண்டாவது சதத்தைப் பூர்த்தி செய்து அசத்தினார். அவருக்கு துணையாக ஜஸ்டின் க்ரீவ்ஸும் அதிரடியாக விளையாட அணியின் ஸ்கோரும் 300 ரன்களைத் தாண்டியது. மேற்கொண்டு இப்போட்டியில் தொடர்ந்து அதிரடியாக விளையாடி வந்த கேசி கார்டி 142 பந்துகளில் 15 பவுண்டரிகள், 8 சிக்ஸர்கள் என 170 ரன்களைக் குவித்த நிலையில் விக்கெட்டை இழந்து இரட்டை சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். 

Also Read: LIVE Cricket Score

அதேசமயம் மறுமுனையில் அதிரடி காட்டிய ஜஸ்டின் க்ரீவ்ஸ் 22 பந்துகளில் 5 பவுண்டரி, 3 சிக்ஸர்களுடன் அரைசதம் கடந்த கையோடு விக்கெட்டை இழக்க, இறுதியில் மேத்யூ ஃபோர்டும் 12 ரன்களுடன் நடையைக் கட்டினார். இதன் காரணமாக வெஸ்ட் இண்டீஸ் அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 385 ரன்களைக் குவித்தது. அயர்லாந்து அணி தரப்பில் பேரி மெக்கர்த்தி 3 விக்கெட்டுகளையும், லியாம் மெக்கர்த்தி 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். 

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News