வரும் 2023 ஜனவரி மாதம் ஆறு அணிகள் பங்கேற்கும் புதிய டி20 லீக் போட்டியை சூப்பர் ஸ்போர்ட் நிறுவனத்துடன் இணைந்து நடத்துகிறது தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம். ஒரு மாதம் வரை நடைபெறவுள்ள இப்போட்டியில் 33 ஆட்டங்கள் நடைபெறவுள்ளன. ஒவ்வொரு அணியிலும் 17 வீரர்கள் இடம்பெறுவார்கள். முதல் வருடம் 34 ஆட்டங்கள் நடைபெறவுள்ளன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் இருமுறை விளையாடும். துபை, அபுதாபி, ஷார்ஜாவில் ஆட்டங்கள் நடைபெறும். 

Advertisement

ஐக்கிய அரபு லீகிலும் ஒரு புதிய டி20 லீக் போட்டி அதே 2023 ஜனவரியில் தொடங்கப்படவுள்ளது. சர்வதேச லீக் டி20 என்கிற ஐஎல்டி20 போட்டியில் அதிகச் சம்பளம் தரப்படுவதால் அதில் இணைந்துகொள்ள பிரபல வீரர்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

Advertisement

ரிலையன்ஸ் (ஐபிஎல் மும்பை அணி நிர்வாகம்), கொல்கத்தா நைட் ரைடர்ஸ், கேப்ரி குளோபல், ஜிஎம்ஆர், லேன்சர் கேபிட்டல், அதானி ஸ்போர்ட்ஸ்லைன் என ஆறு அணிகளின் உரிமையாளர்கள் வீரர்களைத் தேர்வு செய்யும் பணியில் உள்ளார்கள். இப்போட்டியில் ஒவ்வொரு அணியிலும் 18 வீரர்கள் இருப்பார்கள். அவர்களில் நால்வர் யூஏஇ மற்றும் இருவர் அசோசியேட் நாடுகளைச் சேர்ந்தவர்களாக இருப்பார்கள். 

கிரன் பொல்லார்ட், டுவைன் பிராவோ, நிகோலஸ் பூரன், ஆண்ட்ரே ரஸ்ஸல், மொயீன் அலி, ஹெட்மையர், டேவிட் மலான், சுனில் நரைன், எவின் லூயிஸ் போன்ற பிரபல வீரர்கள் ஐஎல்டி20 போட்டியில் விளையாடவுள்ளார்கள். இதனால் 2023 ஜனவரியில் டி20 லீக் ஆட்டங்களும் அதில் பங்கேற்கும் பிரபல வீரர்களும் ரசிகர்களுக்கு ஏராளமான புதிய அனுபவத்தைத் தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இதில் மும்பை இந்தியன்ஸ் எமிரேட்ஸ் அணி கீரன் பொல்லார்ட், டுவைன் பிராவோ, நிக்கோலஸ் பூரன், வில் ஸ்மித் ஆகியோரை ஒப்பந்தம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News