இந்தியாவில் தொடங்கி நடைபெற்றுவரும் ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ள நிலையில், எந்த நான்கு அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. இந்நிலையில் இத்தொடரில் நாளை நடைபெறும் 47ஆவது லீக் போட்டியில் ரிஷப் பந்த் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை எதிர்த்து ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது. நடப்பு ஐபிஎல் தொடரில் இரு அணிகளும் தலா 5 போட்டிகளில் வெற்றியைப் பதிவுசெய்துள்ளன. இருப்பினும் இதில் கேகேஆர் அணி 8 போட்டிகளிலும், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 10 போட்டிகளிலும் இந்த வெற்றியை பெற்றுள்ளன. இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெற்று புள்ளிப்பட்டியளில் முன்னேறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.

Advertisement

போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - டெல்லி கேப்பிட்டல்ஸ்
  • இடம் - ஈடன் கார்டன், கொல்கத்தா
  • நேரம் - இரவு 7.30 மணி
Advertisement

பிட்ச் ரிப்போர்ட்

கொல்கத்தாவிலுள்ள ஈடன் கார்டன் மைதானமானது சுழற்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமான மைதானமாக பார்க்கப்படுகிறது. மேலும் கொல்கத்தா அணியிலும் அதிகபடியான சுழற்பந்து வீச்சாளர் இருப்பதால் அவர்களும் மைதானத்தை சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக உருவாக்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனாலும் இங்கு நடைபெற்ற போட்டிகளில் 250 ரன்களை பேட்டர்கள் எளிதில் எட்டியுள்ளதால் நிச்சயம் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளுக்கு பஞ்சமிருக்காது. இதனால் இப்போட்டியில் டாஸ் வெல்லும் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்வது வெற்றிக்கு வழி வகுக்கலாம்.

நேருக்கு நேர்

  • மோதிய போட்டிகள் - 33
  • கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - 17
  • டெல்லி கேப்பிட்டல்ஸ் - 15
  • முடிவில்லை - 01

நேரலை

Advertisement

இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் ஐபிஎல் தொடரின் இந்த சீசனின் அனைத்து போட்டிகளையும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் நேரலையில் கண்டு ரசிக்கலாம். அதேசமயம் இத்தொடரின் ஓடிடி உரிமத்தை வியாகம் 18 நிறுவனம் பெற்றுள்ளதால், ரசிகர்கள் இத்தொடரை ஜியோ சினிமா ஓடிடி தளத்திலும் இலவசமாக நேரலையில் கண்டு மகிழலாம். 

உத்தேச லெவன்

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்: பில் சால்ட், சுனில் நரைன், ஆங்கிரிஷ் ரகுவன்ஷி, ஸ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), வெங்கடேஷ் ஐயர், ஆண்ட்ரே ரசல், ரின்கு சிங், துஷ்மந்த சமீரா, வருண் சக்ரவர்த்தி, ஹர்ஷித் ராணா, அனுகுல் ராய்.

Advertisement

டெல்லி கேப்பிட்டல்ஸ்: ஜேக் ஃப்ரேசர்-மெக்குர்க், அபிஷேக் சர்மா, ஷாய் ஹோப், ரிஷப் பந்த் (கேப்டன்), டிரிஸ்டன் ஸ்டப்ஸ், அக்ஸர் படேல், குல்தீப் யாதவ், லிசாத் வில்லியம்ஸ், முகேஷ் குமார், கலீல் அகமது, ரசிக் சலாம்.

ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்

  • விக்கெட் கீப்பர்கள் - ஷாய் ஹோப், பில் சால்ட், ரிஷப் பந்த்
  • பேட்ஸ்மேன்கள் - ஸ்ரேயாஸ் ஐயர், ஜேக் ஃபிரேசர்-மெக்குர்க் (துணை கேப்டன்), டிரிஸ்டன் ஸ்டப்ஸ்
  • ஆல்-ரவுண்டர் - சுனில் நரைன் (கேப்டன்), ஆண்ட்ரே ரஸல், அக்ஸர் படேல்
  • பந்துவீச்சாளர்கள் - கலீல் அகமது, ஹர்ஷித் ராணா.

KKR vs DC Dream11 Prediction, Today Match Prediction, Today Match KKR vs DC, KKR vs DC Dream11 Team, Fantasy Cricket Tips, KKR vs DC Pitch Report, Today Cricket Match Prediction, Today Cricket Match, Dream11 Team, Playing XI, Pitch Report, Injury Update of the match between Kolkata Knight Riders vs Delhi Capitals

Advertisement

Disclaimer:*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News