இந்தியாவில் தொடங்கி நடைபெற்றுவரும் 17ஆவது சீசன் ஐபிஎல் தொடரானது நாளுக்கு நாள் ரசிகர்களின் சுவாரஸ்யத்தை கூட்டிவருகிறது. இத்தொடரில் நாளை நடைபெறும் 36ஆவது லீக் போட்டியில் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்த்து, ஃபாஃப் டூ பிளெசிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி விளையாடவுள்ளது. இந்த சீசனில் ஆர்சிபி அணி விளையாடிய 7 போட்டிகளில் ஒரு வெற்றியை மட்டுமே பதிவுசெய்து புள்ளிப்பட்டியலின் கடைசி இடத்தில் உள்ளது. இதனால் இனி வரும் போட்டிகளில் அந்த அணி வெற்றிபெற்றால் மட்டுமே பிளே ஆஃப் சுற்று குறித்து நினைக்க முடியும் என்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளது. 

Advertisement

போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு
  • இடம் - ஈடன் கார்டன்ஸ் மைதானம், கொல்கத்தா
  • நேரம் - மாலை 3.30 மணி
Advertisement

பிட்ச் ரிப்போர்ட்

கொல்கத்தாவிலுள்ள ஈடன் கார்டன் மைதானமானது சுழற்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமான மைதானமாக பார்க்கப்படுகிறது. மேலும் கொல்கத்தா அணியிலும் அதிகபடியான சுழற்பந்து வீச்சாளர் இருப்பதால் அவர்களும் மைதானத்தை சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக உருவாக்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இப்போட்டியில் டாஸ் வெல்லும் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்வது வெற்றிக்கு வழி வகுக்கலாம்.

நேருக்கு நேர்

  • மோதிய போட்டிகள் - 33
  • கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - 19
  • ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - 14

நேரலை

Advertisement

இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் ஐபிஎல் தொடரின் இந்த சீசனின் அனைத்து போட்டிகளையும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் நேரலையில் கண்டு ரசிக்கலாம். அதேசமயம் இத்தொடரின் ஓடிடி உரிமத்தை வியாகம் 18 நிறுவனம் பெற்றுள்ளதால், ரசிகர்கள் இத்தொடரை ஜியோ சினிமா ஓடிடி தளத்திலும் இலவசமாக நேரலையில் கண்டு மகிழலாம். 

உத்தேச லெவன்

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்: பில் சால்ட் (விக்கெட் கீப்பர்), சுனில் நரைன், ஆங்க்ரிஷ் ரகுவன்ஷி, ஸ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), ஆண்ட்ரே ரஸல், ரிங்கு சிங், வெங்கடேஷ் ஐயர், மிட்செல் ஸ்டார்க், வருண் சக்ரவர்த்தி, ஹர்ஷித் ராணா, வைபவ் அரோரா.

Advertisement

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு: விராட் கோலி, ஃபாஃப் டு பிளெசிஸ் (கேப்டன்), வில் ஜாக், ரஜத் படிதார், தினேஷ் கார்த்திக், மஹிபால் லோம்ரோர், அனுஜ் ராவத், வைஷாக் விஜய் குமார், லாக்கி பெர்குசன், ரீஸ் டாப்லி, யாஷ் தயாள்.

ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்

  • விக்கெட் கீப்பர் - தினேஷ் கார்த்திக், பில் சால்ட்
  • பேட்ஸ்மேன்கள் - விராட் கோலி (துணை கேப்டன்), ஃபாஃப் டு பிளெஸ்ஸிஸ், ஆங்க்ரிஷ் ரகுவன்ஷி
  • ஆல்-ரவுண்டர் - சுனில் நரைன் (கேப்டன்), ஆண்ட்ரே ரசல், வில் ஜாக்
  • பந்துவீச்சாளர்கள் - ரீஸ் டாப்லி, வருண் சக்ரவர்த்தி, ஹர்ஷித் ராணா.

KKR vs RCB IPL 2024 Dream11 Prediction, Today Match KKR vs RCB, KKR vs RCB Dream11 Team, Fantasy Cricket Tips, KKR vs RCB Pitch Report, Today Cricket Match Prediction, Today Cricket Match, Dream11 Team, Playing XI, Pitch Report, Injury Update of the match between Kolkata Knight Riders vs Royal Challengers Bangaluru

Advertisement

Disclaimer:*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News