17ஆவது சீசன் ஐபிஎல் தொடரானது நாளை கோலாகலமாக தொடங்கவுள்ளது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்கும் இத்தொடரில் எந்த அணி கோப்பையை வெல்லும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. இதில் நாளை மறுநாள் நடைபெறும் 3ஆவது லீக் போட்டியில் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்த்து பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி பலப்பரீட்சை நடத்துகிறது. இரு அணிகளும் ஐபிஎல் தொடரில் கோப்பையை வென்றுள்ளதால், நடப்பு சீசனிலும் மீண்டும் கோப்பையை வெல்லும் அணிகளாக கணிப்பட்டுள்ளன. மேலும் இரு அணிகளிலும் நட்சத்திர பட்டாளங்கள் உள்ளதால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெற்று தொடரை வெற்றியுடன் தொடங்கும் என்ற எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன. 

Advertisement

போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத்
  • இடம் - ஈடன் கார்டன், கொல்கத்தா
  • நேரம் - இரவு 7.30 மணி
Advertisement

பிட்ச் ரிப்போர்ட்

கொல்கத்தாவிலுள்ள ஈடன் கார்டன் மைதானமானது சுழற்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமான மைதானமாக பார்க்கப்படுகிறது. மேலும் கொல்கத்தா அணியிலும் அதிகபடியான சுழற்பந்து வீச்சாளர் இருப்பதால் அவர்களும் மைதானத்தை சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக உருவாக்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 

நேரலை

இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் ஐபிஎல் தொடரின் இந்த சீசனின் அனைத்து போட்டிகளையும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் நேரலையில் கண்டு ரசிக்கலாம். அதேசமயம் இத்தொடரின் ஓடிடி உரிமத்தை வியாகம் 18 நிறுவனம் பெற்றுள்ளதால், ரசிகர்கள் இத்தொடரை ஜியோ சினிமா ஓடிடி தளத்திலும் இலவசமாக நேரலையில் கண்டு மகிழலாம். 

Advertisement

நேருக்கு நேர்

  • மோதிய போட்டிகள் - 25
  • கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - 16
  • சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - 09

உத்தேச லெவன்

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்: ரஹ்மானுல்லா குர்பாஸ், வெங்கடேஷ் ஐயர், ஸ்ரேயாஸ் ஐயர் (கே), நிதிஷ் ராணா, ரிங்கு சிங், ஆண்ட்ரே ரஸல், சுனில் நரைன், மிட்செல் ஸ்டார்க், சேத்தன் சகாரியா, வருண் சக்ரவர்த்தி, வைபவ் அரோரா.

Advertisement

சன்ரைசர்ஸ் ஹைதராபாத்: மயங்க் அகர்வால், டிராவிஸ் ஹெட், ராகுல் திரிபாதி, ஐடன் மார்க்ரம், ஹென்ரிச் கிளாசென், உபேந்திர யாதவ், பாட் கம்மின்ஸ் (கே), வாஷிங்டன் சுந்தர், உம்ரான் மாலிக், நடராஜன், புவனேஷ்வர் குமார்.

ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்

  • விக்கெட் கீப்பர் - ரஹ்மனுல்லா குர்பாஸ்
  • பேட்ஸ்மேன்கள் - ஹென்ரிச் கிளாசென், டிராவிஸ் ஹெட், ஸ்ரேயாஸ் ஐயர், ரிங்கு சிங்
  • ஆல்ரவுண்டர்கள் - ஆண்ட்ரே ரஸல், ஐடன் மார்க்ரம் (கேப்டன்)
  • பந்துவீச்சாளர்கள் - மிட்செல் ஸ்டார்க்(துணைக்கேப்டன்), புவனேஷ்வர் குமார், வருண் சக்ரவர்த்தி, நடராஜன்

KKR vs SRH IPL 2024 Dream11 Prediction, Today Match KKR vs SRH, KKR vs SRH Dream11 Team, Fantasy Cricket Tips, KKR vs SRH Pitch Report, Today Cricket Match Prediction, Today Cricket Match, Dream11 Team, Playing XI, Pitch Report, Injury Update of the match between KKR vs SRH

Advertisement

Disclaimer:*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News