Kolkata Knight Riders vs Sunrisers Hyderabad, IPL 2024 Final Dream11 Team: இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வந்த ஐபிஎல்  தொடரின் 17ஆவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. அதன்படி இத்தொடரில் நாளை நடைபெறும் இறுதிப்போட்டியில் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்த்து பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி எதிர்கொள்ள உள்ளது. முன்னதாக முதலாவது குவாலிஃபையர் சுற்று ஆட்டத்தில் ஹைதராபாத் அணியை வீழ்த்தி கேகேஆர் அணியானது இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.  இதனால் அத்தோல்விக்கு பதிலடி கொடுப்பதுடன் ஐபிஎல் கோப்பையையும் வெல்லும் முனைப்பில் ஹைதராபாத் அணி இப்போட்டியை எதிர்கொள்ள உள்ளது. அதேசமயம் இத்தொடரில் மிகவும் வலிமை வாய்ந்த அணியாக வலம் வரும்  கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் கோப்பையை வெல்ல கடுமையாக போராடும் என்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளது.

Advertisement

KKR vs SRH: போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத்
  • இடம் - எம் ஏ சிதம்பரம் கிரிக்கெட் மைதானம், சென்னை
  • நேரம் - இரவு 7.30 மணி
Advertisement

KKR vs SRH, Pitch Report

பொதுவாக,  சென்னை சேப்பாக்கம் ஆடுகளம் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான மைதானமாக பார்க்கப்படும் நிலையில், இந்த சீசன் ஐபிஎல் தொடரில் அதிக ஸ்கோர்கள் குவிக்க கூடிய மைதானங்களில் ஒன்றாக மாறியுள்ளது. இந்த மைதானத்தின் முதல் இன்னிங்ஸ் சராசரியானது 170 ரன்களாக இருக்கிறது. மேலும் இப்போட்டியானது இரவில் நடைபெறவுள்ளதால் நிச்சயம் பனியின் தாக்கம் இருக்கும். இதனால் டாஸ் வெல்லும் அணி சேஸிங்கை தேர்வு செய்வது வெற்றிக்கு வழிவகுக்கலாம்.

KKR vs SRH Head to Head Record

  • மோதிய போட்டிகள் - 27
  • கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - 18
  • சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - 09

KKR vs SRH Where to Watch?

Advertisement

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்: ரஹ்மானுல்லா குர்பாஸ், சுனில் நரைன், வெங்கடேஷ் ஐயர், ஸ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), நிதிஷ் ராணா, ரின்கு சிங், ஆண்ட்ரே ரஸல், மிட்செல் ஸ்டார்க், ஹர்ஷித் ராணா, வருண் சக்ரவர்த்தி, வைபவ் அரோரா.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத்: அபிஷேக் சர்மா, டிராவிஸ் ஹெட், ராகுல் திரிபாதி, நிதிஷ் குமார் ரெட்டி, ஹென்ரிச் கிளாசென், அப்துல் சமத், ஷாபாஸ் அகமது, பாட் கம்மின்ஸ் (கேப்டன்), புவனேஷ்வர் குமார், ஜெய்தேவ் உனட்கட், தங்கராசு நடராஜன்.

KKR vs SRH, Dream11 Team

  • விக்கெட் கீப்பர் - ஹென்ரிச் கிளாசென்
  • பேட்ஸ்மேன்கள் - டிராவிஸ் ஹெட் (துணை கேப்டன்), வெங்கடேஷ் ஐயர், அபிஷேக் சர்மா, ராகுல் திரிபாதி
  • ஆல்ரவுண்டர் - சுனில் நரைன் (கேப்டன்), ஆண்ட்ரே ரஸல்
  • பந்துவீச்சாளர்கள் - பாட் கம்மின்ஸ், நடராஜன், வருண் சக்ரவர்த்தி, ஹர்ஷித் ராணா.
Advertisement

KKR vs SRH Dream11 Prediction, Today Match Prediction, Today Match KKR vs SRH, KKR vs SRH Dream11 Team, Fantasy Cricket Tips, KKR vs SRH Pitch Report, Today Cricket Match Prediction, Today Cricket Match, Dream11 Team, Playing XI, Pitch Report, Injury Update of the match between Kolkata Knight Riders vs Sunrisers Hyderabad

Disclaimer:*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News