விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட் போட்டி விரைவில் நடக்க இருக்கும் நிலையில் ஆல்ரவுண்டர் குர்னல் பாண்டியா எந்தவிதமான காரணமும் இன்றி திடீரென விலகியுள்ளார்.

Advertisement

பரோடா கிரிக்கெட் அமைப்பின் செயலாளர் அஜிஸ் லீலே நிருபர்களிடம் கூறுகையில், ''பரோடா அணியின் கேப்டன் பதவியிலிருந்து குர்னல் பாண்டியா விலகியது உண்மைதான். ஆனால், ஒரு வீரராக விஜய் ஹசாரே கோப்பையில் அவர் விளையாடுவார்.

Advertisement

தன்னுடைய பதவி விலகல் கடிதத்தை மின்னஞ்சலில் வாரியத் தலைவருக்கு அனுப்பியுள்ளார். அந்தக் கடிதம் எனக்குக் கிடைத்தபின் இது முறைப்படி அறிவிக்கப்பட்டது. அந்தக் கடிதத்தில் குர்னல் பாண்டியா தான் பதவி விலகியதற்கு எந்தவிதமான காரணத்தையும் தெரிவிக்கவில்லை. ஆனால், வீரராக அணியில் விளையாட விருப்பமாக இருப்பதாக குர்னல் பாண்டியா கூறியுள்ளார்” எனத் தெரிவித்தார்.

ஐபிஎல் டி20 தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம் பெற்றிருந்த குர்னல் பாண்டியா கடந்த சீசனில் பெரிய அளவுக்கு ரன்கள் ஸ்கோர் செய்யவில்லை.

மேலும் 15ஆவது ஐபிஎல் சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணியில் குர்னல் பாண்டியாவும், அவரின் சகோதரர் ஹர்திக் பாண்டியாவும் தக்கவைக்கப்படவில்லை. புதிதாக அகமதாபாத் அணி வருவதால் இருவரும் அந்த அணிக்குச் செல்லலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News