ஐபிஎல் தொடரில் நேற்ற்ய் நடைபெற்ற எலிமினேட்டர் சுற்று ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. முல்லன்பூரில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

Advertisement

அதன்படி களமிறங்கிய அந்த அணியில் அதிகபட்சமாக தொடக்க வீரர்கள் ரோஹித் சர்மா 9 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் என 81 ரன்களையும், ஜானி பேர்ஸ்டோவ் 4 பவுண்டரி, 3 சிக்ஸர்களுடன் 47 ரன்களையும், சூர்யகுமார் யாதவ் ஒரு பவுண்டரி 3 சிக்ஸர்களுடன் 33 ரன்களையும் சேர்த்தனர். இதன்மூலம் மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 228 ரன்களைக் குவித்துள்ளது. குஜராத் தரப்பில் சாய் கிஷோர் மற்றும் பிரஷித் கிருஷ்ணா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

Advertisement

அதன்பின் இலக்கை நோக்கி களமிறங்கிய குஜராத் டைட்டன்ஸ் அணியில் சாய் சுதர்ஷன் 80 ரன்களையும், வாஷிங்டன் சுந்தர் 48 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் சோபிக்க தவறினர். இதனால் குஜராத் டைட்டன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 208 ரன்களை மட்டுமே சேர்த்தது. இதன்மூலம் மும்பை இந்தியன்ஸ் அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸை வீழ்த்தி வெற்றிபெற்று அசத்தியதுடன் குவாலிஃபையர் சுற்றுக்கும் முன்னேறி அசத்தியுள்ளது. 

இந்நிலையில் இப்போட்டியில் தோல்வியடைந்தது குறித்து பேசிய குஜராத் அணி கேப்டன் ஷுப்மன் கில், “இது கிரிக்கெட்டின் அற்புதமான ஆட்டங்களில் ஒன்றாகும், இதில் நாங்கள் அனைத்தையும் சரியாகச் செய்தோம் என்று நினைக்கிறேன். கடைசி மூன்று-நான்கு ஓவர்கள் எங்கள் வழியில் செல்லவில்லை, ஆனாலும் இது ஒரு நால்ல ஆட்டமாகும். ஆனால் மூன்று எளிதான கேட்சுகளை விடும்போது அது பந்து வீச்சாளர்களால் கட்டுப்படுத்துவது எளிதானது இல்லை.

Also Read: LIVE Cricket Score

இந்த போட்டியில்  சாய் சுதர்ஷன் மற்றும் வாஷிங்டன் சுந்தர் இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். மேலும் அவர்களிடம் நீங்கள் விளையாட விரும்பும் ஆட்டத்தை விளையாடுங்கள் என்று கூறியிருந்தோம். இருவரும் களத்தில் இருந்த வரை எங்காளுக்கான வெற்றி வாய்ப்பும் இருந்தது. கடந்த 2-3 ஆட்டங்கள் எங்கள் வழியில் செல்லவில்லை, ஆனாலும் அனைத்து வீரர்களுக்கும் தங்களால் முடிந்தவற்றை செய்துள்ளனர்” என்று தெரிவித்துள்ளார்.

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News