இந்திய மகளிர் - தென் ஆப்பிரிக்க மகளிர் அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டியானது சென்னையில் உள்ள எம் ஏ சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய மகளிர் அணியானது தொடக்க வீராங்கனைகள் ஸ்மிருதி மந்தனா மற்றும் ஷஃபாலி வர்மா ஆகியோரது அபாரமான ஆட்டத்தின் மூலம் முதல் இன்னிங்ஸில் 6 விக்கெட் இழப்பிற்கு 603 ரன்களைச் சேர்த்த நிலையில் டிக்ளர் செய்வதாக அறிவித்தது. 

Advertisement

இதைத்தொடர்ந்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய தென் ஆப்பிரிக்க மகளிர் அணியில் சுனே லூஸ் 65 ரன்களையும், மரிஸான் கேப் 74 ரன்களையும் சேர்த்ததைத் தவிர்த்து மற்ற வீராங்கனைகள் அனைவரும் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டுகளை இழந்ததன் காரணமாக அந்த அணி 266 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட்டானது. இந்திய அணி தரப்பில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய ஸ்நே ராணா 8 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். 

Advertisement

இதன்மூலம் ஃபலோ ஆனை தவிர்க்க தவறிய தென் ஆப்பிரிக்க மகளிர் அணியானது 337 ரன்கள் பின் தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடர்ந்தது. இதில் போஷ்க் 9 ரன்களில் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்ப, அதன்பின் இணைந்த கேப்டன் லாரா வோல்வார்ட் - சுனே லூஸ் இணை அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் அணியின் ஸ்கோரையும் மளமளவென உயர்த்தினர்.

இதில் சதமடித்து அசத்திய சுனே லூஸ் 109 ரன்களில் விக்கெட்டை இழக்க, மறுபக்கம் லாரா வோல்வார்ட் தனது சதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். அதன்பின் 122 ரன்கள் சேர்த்திருந்த நிலையில் வோல்வார்ட்டும் விக்கெட்டை இழக்க, நட்சத்திர வீராங்கனைகள் மரிஸான் கேப் 31, டெல்மி டக்கர் 0 , ஜஃப்தா 9, டெர்க்சன் ஆகியோர் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றினர். இதனால் அந்த அணி 6 விக்கெட் இழப்பிற்கு 324 ரன்களைச் சேர்த்து தடுமாறி வருகிறது. 

இந்நிலையில் இப்போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி கேப்டன் லாரா வோல்வார்ட் சதமடித்து அசத்தியதன் மூலம் வரலாற்று சாதனை ஒன்றையும் நிகழ்த்தியுள்ளார். அதன்படி சர்வதேச மகளிர் கிரிக்கெட் வரலாற்றில் ஒரே ஆண்டிம், டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் சதம் விளாசிய முதல் வீராங்கனை எனும் சாதனையைப் படைத்துள்ளார். அதன்படி, இலங்கை அணிக்கு எதிரானடி டி20 தொடரிலும், இந்திய் அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடரில் லாரா வோல்வார்ட் சதமடித்து அசத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

அதுமட்டுமின்றி மூன்று வடிவிலான கிரிக்கெட் போட்டிகளிலும் சதமடித்த மூன்றாவது வீராங்கனை மற்றும் முதல் தென் ஆப்பிரிக்க வீராங்கனை எனும் சாதனையும் லாரா வோல்வார்ட் படைத்துள்ளார். முன்னதாக இங்கிலாந்து அணியின் ஹீதர் நைட் மற்றும் டாமி பியூமண்ட் ஆகியோர் மட்டுமே மூன்று வடிவிலான கிரிக்கெட் போட்டிகளிலும் சதமடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News