இங்கிலாந்தில் நடைபெற்றுவரும் உள்ளூர் ஒருநாள் கோப்பை தொடரானது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரில் இன்று நடைபெற்ற காலிறுதிச்சுற்று ஆட்டத்தில் ஹாம்ஷைர் - லீசெஸ்டர்ஷைர் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. லெய்செஸ்டர் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற லீசெஸ்டர்ஷைர் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய ஹாம்ஷைர் அணியில் தொடக்க வீரர் ஃப்ளெட்சா மிடில்டன் 16 ரன்களிலும், டாம் பிரஸ்ட் 10 ரன்களிலும், பென் பிரௌன் 13 ரன்களிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர். 

Advertisement

பின்னர் இணைந்த கேப்டன் நிக் கிப்பின்ஸ் - லியாம் டௌசன் இணை அபாரமாக விளையாடி விக்கெட் இழப்பை தடுத்ததுடன் அணியின் ஸ்கோரையும் மளமளவென உயர்த்தினர். இப்போட்டியில் அதிரடியாக விளையாடி வந்த கேப்டன் நிக் கிப்பின்ஸ் சதமடித்து அசத்தியதோடு 14 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 136 ரன்களைச் சேர்த்த நிலையில் விக்கெட்டை இழந்தார். அவருக்கு துணையாக விளையாடி வந்த லியாம் டௌசனும் அரைசதம் கடந்த கையோடு 2 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 50 ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியனுக்கு திரும்பினார். 

Advertisement

பின்னர் களமிறங்கிய வீரர்களீல் டோமினிக் கெல்லி 39 ரன்களைச் சேர்த்ததைத் தவிர்த்து மற்ற வீரர்கள் யாரும் பெரிதளவில் சோபிக்க தவறினர். இதனால் ஹாம்ஷைர் அணியானது 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 290 ரன்களைக் குவித்தது. லீசெஸ்டர்ஷைர் அணி தரப்பில் டாம் ஸ்கிரீவன் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். பின்னர் கடின இலக்கை நோக்கி விளையாடிய லீசெஸ்டர்ஷைர் அணிக்கும் தொடக்கம் சிறப்பாக அமையவில்லை. அணியின் டாப் ஆர்டர் வீரர்கள் ரோமன் வால்கர், கேப்டன் லூயிஸ் ஹில், சாலமன் புடிங்கர் ஆகியோர் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். 

இதனால் லீசெஸ்டர்ஷைர் அணி 30 ரன்களுக்கே 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதனையடுத்து ஜோடி சேர்ந்த அஜிங்கியா ரஹானே மற்றும் பீட்டர் ஹேண்ட்ஸ்கோம்ப் இணை சிறப்பாக விளையாடி விக்கெட் இழப்பை தடுத்ததுடன், பவுண்டரியும் சிக்ஸர்களையும் விளாசி அணியின் ஸ்கோரையும் மளமளவென உயர்த்தினர். இப்போட்டியில் தொடர்ந்து அபாரமாக விளையாடி வந்த இருவரும் தங்கள் அரைசதத்தைப் பதிவுசெய்ததுடன், நான்காவது விக்கெட்டிற்கு 128 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தும் அசத்தினர். அதன்பின் 8 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 74 ரன்கள் எடுத்திருந்த ஹேண்ட்ஸ்கோம்ப் ஆட்டமிழந்தார். 

அவரைத்தொடர்ந்து களமிறங்கிய லூயிஸ் கிம்பர் 2 ரன்களில் நடையைக் கட்ட, மறுபக்கம் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய அஜிங்கியா ரஹானே 2 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 70 ரன்களை எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார். அதன்பின் ஜோடி சேர்ந்த பென் காக்ஸ் - லியாம் ட்ரெவாஸ்கிஸ் இணையும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் 92 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். இதில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட பென் காக்ஸ் 45 ரன்களை எடுத்திருந்த நிலையில் விக்கெட்டை இழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். 

அதேசமயம் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த லியாம் ட்ரெவாஸ்கிஸ் அரைசதம் கடந்ததுடன் 60 ரன்களைச் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார். இதனூலம் லீசெஸ்டர்ஷைர் அணி 49.5 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் ஹாம்ஷைர் அணியை வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது.  இந்த வெற்றியின் மூலம் லீசெஸ்டர்ஷைர் அணியானது அரையிறுதிச் சுற்றுக்கும் முன்னேறி அசத்தியுள்ளது. 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News