வெஸ்ட் இண்டீஸ் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று போட்டிகளை உள்ளடக்கிய ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடியது. இதில் நடந்து முடிந்த டி20 தொடரில் இலங்கை அணியானது 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது. இதையடுத்து நடைபெற்ற ஒருநாள் தொடரிலும் இலங்கை அணி அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி அடுத்தடுத்த போட்டிகளில் வெற்றிபெற்று அசத்தியுள்ளது. 

Advertisement

இதன்மூலம் இலங்கை அணி ஒருநாள் தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியுள்ளது. இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. அதன்படி பல்லகலேவில் உள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து இலங்கை அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. அதன்படி களமிறங்கிய இலங்கை அணிக்கு பதும் நிஷங்கா - அவிஷ்கா ஃபெர்னாண்டோ இணை தொடக்கம் கொடுத்தனர்.

Advertisement

இதில் இருவரும் இணைந்து தொடக்காம் முதலே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன், முதல் விக்கெட்டிற்கு 81 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்தனர். அதன்பின் 34 ரன்களைச் சேர்த்த நிலையில் அவிஷ்கா ஃபெர்னாண்டோ தனது விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். அப்போது மழை நீடித்த காரணத்தால் போட்டி தடைபட்டது.  அதன்பின் தொடர் மழை காரணமாக இப்போட்டியானது 23 ஓவர்களாக குறைக்கப்பட்டது. அதன்பின் இன்னிங்ஸைத் தொடர்ந்து பதும் நிஷங்கா - குசால் மெண்டிஸ் இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.

இதில் அரைசதம் கடந்த பதும் நிஷங்கா 56 ரன்கள் எடுத்த நிலையில் ரன் அவுட்டாக, அடுத்து களமிறங்கிய கேப்டன் சரித் அசலங்காவும் 6 ரன்களுடன் பெவிலியன் திரும்பினர். இருப்பினும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த குசால் மெண்டிஸ் தனது அரைசதத்தைப் பதிவுசெய்ததுடன், 56 ரன்களைக் குவித்து அணிக்கு தேவையான ஃபினிஷிங்கை கொடுத்தார். இதன்மூலம் இலங்கை அணி 23 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 156 ரன்களைச் சேர்த்தது. இதனையடுத்து டக்வொர்த் லூயிஸ் முறைப்படி வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு 23 ஓவர்களில் 195 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

இதனையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எவின் லூயிஸ் மற்றும் பிராண்டன் கிங் இணை அதிரடியான தொடக்கத்தை கொடுத்தனர். இதில் பிராண்டன் கிங் 16 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் விக்கெட்டை இழக்க, மறுபக்கம் அதிரடியாக விளையாடி வந்த எவின் லூயிஸ் அரைசதம் கடந்து அசத்தினார். அவருடன் இணைந்து விளையாடிய கேப்டன் ஷாய் ஹோப் 22 ரன்களை மட்டுமே எடுத்த கையோடு விக்கெட்டை இழந்தார். பின்னர் லூயிஸுடன் ஜோடி சேர்ந்த ரூதர்ஃபோர்ட்டும் அதிரடியாக விளையாட அணியின் ஸ்கோரும் உயர்ந்தது.

Also Read: Funding To Save Test Cricket

Advertisement

இப்போட்டியில் தொடர்ந்து அபாரமாக விளையாடிய வந்த எவின் லூயிஸ் தனது 5ஆவது சதத்தைப்  பதிவுசெய்து அசத்தியது 9 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் என 102 ரன்களைச் சேர்த்தார். அதேசமயம் மறுபக்கம் ரூதர்ஃபோர்ட்டும் தனது பங்கிற்கு 4 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 50 ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். இதன்மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணி 22 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 8 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது. இப்போட்டியில் சதமடித்த எவின் லூயிஸ் ஆட்டநாயகன் விருதையும், தொடர் முழுவது சிறப்பாக செயல்பட்ட சரித் அசலங்கா தொடர் நாயகன் விருதையும் வென்றார். 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News