சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற வீரர்களுக்கான லெஜன்ட்ஸ் லீக் கிரிக்கெட் தொடர் நடத்தப்பட்டு வருகிறது. இதில் நடப்பு சீசன் லெஜன்ட்ஸ் லீக் கிரிக்கெட் தொடரானது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

Advertisement

இதில் நேற்று நடைபெற்ற 4அவது லீக் போட்டியில் சதர்ன் சூப்பர் ஸ்டார்ஸ் - குஜராத் கிரேட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற குஜராத் கிரேட்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய சதர்ன் சூப்பர் ஸ்டார்ஸ் அணியில் பார்த்தீவ் படேல் 4 ரன்களிலும், மார்ட்டின் கப்தில் 22 ரன்களையும், ஹாமில்டன் மஸகட்ஸா 20 ரன்களுடனும், கேதர் ஜாதவ், பவேன் நெஹி ஆகியோர் சொற்ப ரன்களுக்கும் என விக்கெட்டை இழக்க, மறுபக்கம் கேப்டன் தினேஷ் கார்த்திக்கும் 18 ரன்களுடன் பெவிலியனுக்கு திரும்பினார். 

Advertisement

பின்னர் களமிறங்கிய சதுரங்கா டி சில்வா அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தியதுடன் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். மேற்கொண்டு இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த டி சில்வா 6 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 53 ரன்களைச் சேர்த்து அணிக்கு தேவையான ஃபினிஷிங்கைக் கொடுத்தார். இதன்மூலம் சதர்ன் சூப்பர் ஸ்டார்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 144 ரன்களை சேர்த்தது. குஜராத் கிரேட்ஸ் அணி தரப்பில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய மனன் சர்மா 6 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். 

இதனையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய குஜராத் கிரேட்ஸ் அணிக்கு கேப்டன் ஷிகர் தவான் அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்து அணிக்கு தேவையான அடித்தளத்தை அமைத்துக்கொடுத்தார். ஆனால் மறுபக்கம் மோர்னே வேன் வைக் 15 ரன்களில் விக்கெட்டை இழக்க, அடுத்து வந்த லிண்டல் சிம்மன்ஸ் 7 ரன்களுக்கும், முகமது கைஃப் 5 ரன்களுக்கும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். அதேசமயம் மறுமுனையில் அதிரடியாக விளையாடி அரைசதம் கடந்து அசத்திய ஷிகர் தவானும் 3 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 52 ரன்களில் விக்கெட்டை இழந்தார். 

இதனையடுத்து களமிறங்கிய ஆஸ்கர் ஆஃப்கான் 3 ரன்களுக்கும், மனன் சர்மா 10 ரன்களுக்கும், யாஷ்பால் சிங் 5 ரன்களுக்கும் என விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய வீரர்களும் எதிரணி பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். இதனால் குஜராத் கிரேட்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 118 ரன்களை மட்டுமே எடுத்தது. சதர்ன் அணி தரப்பில் பவன் நெகி 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதன்மூலம் சதர்ன் சூப்பர் ஸ்டார்ஸ் அணியானது 26 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் கிரேட்ஸ் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது. 

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News