லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற 14ஆவது லீக் ஆட்டத்தில் கோனார்க் சூர்யாஸ் ஒடிசா மற்றும் இந்தியா கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்தியா கேப்பிட்டல்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. 

Advertisement

அதன்படி களமிறங்கிய ஒடிசா அணிக்கு தொடக்கம் சிறப்பானதாக அமையவில்லை. அணியில் தொடக்க வீரர்கள் ரிச்சர்ட் லீவி ஒரு ரன்னிலும், ஜெஸ்ஸி ரைடர் 3 ரன்களிலும் என அடுத்தடுத்து ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். பின்னர் ஜோடி சேர்ந்த கெவின் ஓ பிரையன் மற்றும் முனவீரா இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தியதுடன், விக்கெட் இழப்பையும் தடுத்து நிறுத்தினர். இப்போட்டியில் தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த கெவின் ஓ பிரையன் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். 

Advertisement

அதேசமயம் மறுபக்கம் அரைசதம்  அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட முனவீரா 33 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய யூசுப் பதான் 12 ரன்களுடன் விக்கெட்டை இழந்தாலும், மறுமுனையில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த கெவின் ஓ பிரையன் 55 ரன்களைச் சேர்த்து அணிக்கு தேவையான ஃபினிஷிங்கை கொடுத்தார். இதன்மூலம் ஒடிசா அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 127 ரன்களைச் சேர்த்தது. இந்தியா கேப்பிட்டல்ஸ் தரப்பில் இக்பால் அப்துல்லா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். 

அதன்பின் இலக்கை நோக்கி விளையாடிய இந்தியா கேப்பிட்டல்ஸ் அணிக்கும் தொடக்கம் அவ்வளவு சிறப்பாக இல்லை. அந்த அணியின் தொடக்க வீரர்கள் டுவைன் ஸ்மித் ரன்கள் ஏதுமின்றியும், ஃபைஸ் ஃபசல் 9 ரன்களுக்கும், கேப்டன் இயன் பெல் 3 10 ரன்களுக்கும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். பின்னர் களமிறங்கிய பரத் சிப்லி ஒருபக்கம் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். அதேசமயம் மறுபக்கம் களமிறங்கிய வீரர்களில் யாரும் பெரிதளவில் ரன்களைச் சேர்க்க தவறினர். 

இருப்பினும் அதிரடியாக் விளையாடி வந்த பரத் சிப்லி அரைசதம் கடந்ததுடன், இறுதிவரை ஆட்டமிழக்கால் 61 ரன்களைச் சேர்த்த நிலையிலும், இந்தியா கேப்பிட்டல்ஸ் அணியானது 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 122 ரன்களை மட்டுமே சேர்த்தது. இதன்மூலம் கோனர்க் சூர்யாஸ் ஒடிசா அணியானது 5 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா கேப்பிட்டல்ஸை வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. இப்போட்டியில் அரைசதம் கடந்து அணியின் வெற்றிக்கு காரணமாக இருந்த கெவின் ஓ பிரையன் ஆட்ட்நாயகன் விருதை வென்றார். 

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News