லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற 12ஆவது லீக் ஆட்டத்தில் சதர்ன் சூப்பர் ஸ்டார்ஸ் மற்றும் கோனார்க் சூர்யாஸ் ஒடிசா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற சதர்ன் சூப்பர் ஸ்டார்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. 

Advertisement

இதையடுத்து களமிறங்கிய கோனார்க் சூர்யாஸ் அணிக்கு ரிச்சர்ட் லிவி - ஜெஸ்ஸி ரெய்டர் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் முதல் ஓவரில் இருந்தே அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ரிச்சர்ட் லிவி தனது அரைசத்ததை பதிவுசெய்து அசத்தியதுடன், 21 பந்துகளில் 9 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் என 63 ரன்களில் விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு திரும்பினார். அதேசமயம் அவருக்கு துணையாக விளையாடிய மற்றொரு தொடக்க வீரர் ஜெஸ்ஸி ரெய்டர் 18 ரன்களில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய கெவின் ஓ பிரையன் 9 ரன்களுக்கும், ராஸ் டெய்லர் 4 ரன்களுக்கும் என விக்கெட்டை இழந்தனர். 

Advertisement

அதன்பின் களமிறங்கிய யூசுப் பதான் ஒருபக்கம் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி 33 ரன்களைச் சேர்த்த நிலையில், மறுமுனையில் விளையாடிய கேப்டன் இர்ஃபான் பதான் 10 ரன்களுக்கும், முனவீரா 16 ரன்களிலும், வினய் குமார் 18 ரன்களையும் சேர்த்தனர். இதனால் கோனார்க் சூர்யாஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 192 ரன்களைக் குவித்தது. சதர்ன் சூப்பர் ஸ்டார்ஸ் அணி தரப்பில் சுபோத் பாட்டி 3 விக்கெட்டுகளையும், சதுரங்கா டி சில்வா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். அதன்பின் கடின இலக்கை நோக்கி விளையாடிய சதர்ன் அணியில் தொடக்க வீரர் மார்ட்டின் கப்தில் அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தார். 

அதேசமயம் மறுபக்கம் மற்றொரு தொடக்க வீரர் ஸ்ரீவஸ்த்ஸ் கோஸ்வாமி 18 ரன்களில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளிக்க, அடுத்து களமிறங்கிய ஹாமில்டன் மஸகட்ஸா 20 ரன்களிலும் என விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு திரும்பினார். ஒருபக்கம் விக்கெட்டுகள் இழந்த சமயத்திலும் மறுமுனையில் தொடர்ந்து அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த மார்ட்டின் கப்தில் தனது சதத்தைப் பதிவுசெய்து அசத்தியதுடன், இறுதிவரை ஆட்டமிழக்காமல் 54 பந்துகளில் 9 பவுண்டரி, 11 சிக்ஸர்களை விளாசி 131 ரன்களைக் குவித்து அசத்தினார். 

அவருக்கு துணையாக விளையாடிய பவன் நெகி 14 ரன்களைச் சேர்த்து அணியின் வெற்றிக்கு உதவினார். இதன்மூலம் சதர்ன் சூப்பர் ஸ்டார்ஸ் அணியானது 16 ஓவர்களிலேயே இலக்கை எட்டியதுடன், 8 விக்கெட் வித்தியாசத்தில் கோனார்க் சூர்யாஸ் ஒடிசா அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. இப்போட்டியில் சதமடித்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்த மார்ட்டின் கப்தில் ஆட்டநாயகன் விருதை வென்றார். 

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News