சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற கிரிக்கெட் வீரர்களுக்காக நடத்தப்படும் லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இத்தொடரில் நேற்று நடைபெற்ற 5ஆவது லீக் போட்டியில் இந்தியா கேப்பிட்டல்ஸ் மற்றும் சதர்ன் சூப்பர் ஸ்டார்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின,

Advertisement

இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய கேப்பிட்டல்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து களமிறங்கியது. அதன்படி, களமிறங்கிய அந்த அணியில் ஃபசல் 9 ரன்களில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய நமன் ஓஜாவும் 16 ரன்களில் விக்கெட்டை இழக்க, அணியின் மற்றொரு தொடக்க வீரரான டுவைன் ஸ்மித்தும் 4 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 36 ரன்களில் விக்கெட்டை இழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். இதனைத்தொடர்ந்து ஜோடி சேர்ந்த பென் டங்க் - ஆஷ்லே நர்ஸ் இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். 

Advertisement

இதில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய பென் டங்க் தனது அரைசதத்தையும் பதிவுசெய்து அசத்தினார். அதன்பின் தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த பென் டங்க் 4 பவுண்டரி, 5 சிக்ஸர்கள் என 61 ரன்களைச் சேர்த்திருந்த நிலையில் பென் டங்க் விக்கெட்டை இழந்தார். இருப்பினும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஆஷ்லே நர்ஸ் 4 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் 40 ரன்களைச் சேர்த்து அணிக்கு ஃபினிஷிங்கை கொடுத்தார். இதன்மூலம் இந்தியா கேப்பிட்டல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்களைச் சேர்த்தது. 

இதனையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய சதர்ன் சூப்பர் ஸ்டார்ஸ் அணிக்கு மார்ட்டின் கப்தில் - ஸ்ரீவஸ்தாஸ் கோஸ்வாமி இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர். இதில் கோஸ்வாமி 17 ரன்களில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய பார்த்தின் படேலும் முதல் பந்திலேயே விக்கெட்டை இழந்தார். மறுபக்கம் தொடர்ந்து அதிரடியாக விளையாடி வந்த மார்ட்டின் கப்தில் 36 ரன்களைச் சேர்த்திருந்த நிலையில் விக்கெட்டை இழந்தார். பின்னர் வந்த கேப்டன் தினேஷ் கார்த்திக்கும் 5 ரன்களை மட்டுமே எடுத்திருந்த நிலையில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். 

பின்னர் இணைந்த பவன் நெகி மற்றும் சிராக் காந்தி இணை அதிரடியாக விளையாடி அணியை வெற்றியை நோக்கி அழைத்துச் சென்றனர். இதில் நெகி 38 ரன்களைச் சேர்த்த நிலையில் ஆட்டமிழக்க, இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த சிராக் காந்தி 38 ரன்களையும், ஜெசல் கரியா 23 ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். இதன்மூலம் சதர்ன் சூப்பர் ஸ்டார்ஸ் அணியானது 19.1 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 4 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா கேப்பிட்டல்ஸ் அணியை வீழ்த்தி தங்களுடைய மூன்றாவது வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது. 

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News