எல்எல்சி 2024: குஜராத் கிரேட்ஸை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது கோனார்க் சூர்யாஸ்!

Updated: Sat, Oct 12 2024 08:57 IST
Image Source: Google

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற வீரர்களுக்காக நடத்தபட்டு வரும் லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் நேற்று நடைபெற்ற கடைசி லீக் போட்டியில் கோனார்க் சூர்யாஸ் ஒடிசா மற்றும் குஜராத் கிரேட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற கோனார்க் சூர்யாஸ் ஒடிசா அணியானது முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. 

இதனையடுத்து களமிறங்கிய குஜராத் கிரேட்ஸ் அணிக்கு வேன் வைக் - ஷிகர் தவான் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் வேன் வை 2 ரன்களை மட்டுமே எடுத்திருந்த நிலையில் விக்கெட்டை இழந்தார். பின்னர் தவானுடன் இணைந்த கிறிஸ் கெயில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் இறங்கினார். இருவரும் அதிரடியாக விளையாடியதுடன் 2ஆவது விக்கெட்டிற்கு 50 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப்பும் அமைத்தனர். அதன்பின் அரைசதம் டிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட கிறிச் கெயில் 2 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 34 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழந்தார்.

அவரைத்தொடர்ந்து களமிறங்கிய முகமது கைஃப் மற்றும் யாஷ்பால் சிங் ஆகியோர் அடுத்தடுத்த பந்துகளில் விக்கெட்டை இழந்தனர். இதன்மூலம் கவென் கூப்பர் ஹாட்ரிக் விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். அவர்களைத் தொடர்ந்து நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஷிகர் தவான் 23 ரன்களில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய லெவராக், மனன் சர்மா ஆகியோரும் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்தானர். இறுதியில் தெபா தாஸ் மற்றும் பிரசன்னா இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணிக்கு தேவையான ஃபினிஷிங்கை கொடுத்தனர். 

இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த தெபா தாஸ் 25 ரன்களையும், பிரசன்னா 31 ரன்களையும் சேர்த்தனர். இதன்மூலம் குஜராத் கிரேட்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 141 ரன்களைக் குவித்தது. கோனார்க் அணி தரப்பில் கெவன் கூப்பர் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதன்பின் இலக்கை நோக்கி விளையாடிய கோனார்க் சூர்யாஸ் அணிக்கு ரிச்சர்ட் லீவி - தில்ஷன் முனவீரா இணை தொடக்கம் கொடுத்தனார். இதில் இருவரும் ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடியதுடன் அணிக்கு தேவையான அடித்தளத்தையும் அமைத்துக்கொடுத்தனர். 

பின் 25 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ரிச்சர்ட் லீவி தனது விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட தில்ஷன் முன வீராவும் 47 ரன்களில் ஆட்டமிழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். பின்னர் களமிறங்கிய கெவின் ஓ பிரையன் ஒருபக்கம் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்திய நிலையில், மறுமுனையில் விளையாடிய யூசுஃப் பதான் 5 ரன்களில் விக்கெட்டை இழந்தார். இருப்பினும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த கெவின் ஓ பிரையன் 43 ரன்களையும், கேப்டன் இர்ஃபான் பதான் 19 ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். 

Also Read: Funding To Save Test Cricket

இதன்மூலம் கோனார் சூர்யாஸ் ஒடிசா அணியானது 15 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 7 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் கிரேட்ஸ் அணியை வீழ்த்தி அசத்தல் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. இந்த வெற்றியின் மூலம் நடப்பு லெஜன்ட்ஸ் லீக் கிரிக்கெட் தொடரில் கோனார்க் சூர்யாஸ் ஒடிசா அணியானது அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறி அசத்தியுள்ளது. இப்போட்டியில் ஹாட்ரிக் விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்திய கெவோன் கூப்பர் ஆட்டநாயகன் விருதை வென்றார், 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை