இலங்கை - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி நேற்று தம்புளாவில் நடைபெற்றது. மழை காரணமாக தாமதமாக தொடங்கிய இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து நியூசிலாந்து அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. 

Advertisement

அதன்படி களமிறங்கிய நியூசிலாந்து அணியில் வில் யங், ஜோஷ் கிளார்க்சன் ஆகியோரைத் தவிர்த்து மற்ற வீரர்கள் யாரும் ரன்களைச் சேர்க்க தவாறியதன் காரணமாக, அந்த அணி 19.3 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 108 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணியில் அதிகபட்சமாக வில் யங் 30 ரன்களையும், ஜோஷ் கிளார்க்சன் 24 ரன்களையும் ரன்களையும் எடுத்தனர். இலங்கை அணி தரப்பில் வநிந்து ஹசரங்கா 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். 

Advertisement

இதனைத்தொடர்ந்து 109 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய இலங்கை அணியில் பதும் நிஷாங்காவைத் தவிர்த்து மற்ற வீரர்கள் அனைவரும் அடுத்தடுத்து நியூசிலாந்து அணியின் பந்துவீசுக்கு ஈடுகொடுக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். இருப்பினும் இறுதிவரை போராடிய நிஷங்கா தனது அரைசதத்தைப் பதிவுசெய்திருந்த நிலையில் 52 ரன்களுக்கு விக்கெட்டை இழக்க இலங்கை அணியின் தோல்வியும் உறுதியானது.

இதனால் இலங்கை அணி 19.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 103 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. நியூசிலாந்து தரப்பில் லோக்கி ஃபெர்குசன், கிளென் பிலீப்ஸ் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதன்மூலம் 5 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்ற நியூசிலாந்து டி20 தொடரை 1-1 சமன் செய்தது. இப்போட்டியில் சிறப்பாக செயல்பட்ட லோக்கி ஃபெர்குசன் ஆட்டநாயகன் விருதையும், வநிந்து ஹசரங்கா தொடர் நாயகன் விருதையும் வென்றனர். 

இந்நிலையில் இப்போட்டியில் நியூசிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் லோக்கி ஃபெர்குசன் ஹாட்ரிக் விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். அதன்படி, இந்த போட்டியில் குசால் பெரேரா, கமிந்து மெண்டிஸ் மற்றும் சரித் அசலங்கா ஆகியோரது விக்கெட்டுகளை கைப்பற்றியதன் மூலம் ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன்மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் நியூசிலாந்து அணிக்காக ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்திய 5ஆவது வீரர் எனும் சாதனையையும் ஃபெர்குசன் படைத்துள்ளார். 

 

Advertisement

இதற்கு முன் ஜேக்கப் ஓரம், டிம் சௌதீ, மைக்கேல் பிரேஸ்வெல், மேட் ஹென்றி ஆகியோர் நியூசிலாந்து அணிக்காக சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஹாட்ரிக் விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளனர். அதிலும் குறிப்பாக அந்த அணியின் அனுபவ வேகப்பந்து வீச்சாளர் டிம் சௌதீ 2010ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிராகவும் மற்றும் 2022 ஆம்  ஆண்டு இந்திய அணிக்கு எதிராகவும் என இரண்டு முறை ஹாட்ரிக் விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

நியூசிலாந்து அணிக்காக ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்கள் (டி20)

  • ஜேக்கப் ஓரம் vs இலங்கை, 2009
  • டிம் சௌதீ vs பாகிஸ்தான், 2010
  • மைக்கேல் பிரேஸ்வெல் vs அயர்லாந்து, 2022
  • டிம் சௌதீ vs இந்தியா, 2022
  • மாட் ஹென்றி vs பாகிஸ்தான், 2023
  • லோக்கி ஃபெர்குசன் vs இலங்கை, 2024

Also Read: Funding To Save Test Cricket

Advertisement

 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News