இலங்கையில் நடைபெற்றுவரும் 5ஆவது சீசன் லங்கா பிரீமியர் லீக் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற 5ஆவது லீக் போட்டியில் கலே மார்வெல்ஸ் மற்றும் கொழும்பு ஸ்டிரைகர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற கொழும்பு ஸ்டிரைக்கர்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து களமிறங்கிய கலே அணிக்கு நிரோஷன் டிக்வெல்லா - அலெக்ஸ் ஹேல்ஸ் தொடக்கம் கொடுத்தனர்.

Advertisement

இதில் அலெக்ஸ் ஹேல்ஸ் 14 ரன்களில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய டிம் செய்ஃபெர்ட் 12 ரன்களிலும், பனுகா ராஜபக்ஷா ரன்கள் ஏதுமின்றியும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். அதேசமயம் மறுபக்கம் அதிரடியாக விளையாடி அரைசதம் கடந்திருந்த கேப்டன் நிரோஷன் டிக்வெல்லா 6 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் உள்பட 50 ரன்களைச் சேர்த்த நிலையில் விக்கெட்டை இழந்தார். 

Advertisement

அத்ன்பின் இணைந்த சஹான் அராச்சிகே மற்றும் இசுரு உதானா இணையும் அதிரடியாக விளையாட அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது. இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய உதானா அரைசதம் கடந்தார். அதன்பின் சஹான் அராச்சிகே 35 ரன்களிலும், இசுரு உதானா 52 ரன்களிலும் என விக்கெட்டுகளை இழக்க, அடுத்து களமிறங்கிய வீரர்களும் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்தார். 

இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் கலே மார்வெல்ஸ் அணியானது அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 179 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. கொழும்பு ஸ்டிரைக்கர்ஸ் அணி தரப்பில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய ஷதாப் கான் 4 விக்கெட்டுகளையும், பினுரா ஃபெர்னாண்டோ 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார். இதனையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய கொழும்பு அணிக்கு எதிர்பார்த்த தொடக்கம் கிடைக்கவில்லை. 

அந்த அணியின் தொடக்க வீரர் ஷெவன் டேனியல் 7 ரன்களிலும், முகமது வசீம் 16 ரன்களிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழக்க, மற்றொரு தொடக்க வீரரான ரஹ்மனுல்லா குர்பாஸ் 29 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தார். அதன்பின் கலமிறங்கிய சமரவிக்ரமா 16 ரன்களுக்கும், கிளென் பிலீப்ஸ் 26 ரன்களுக்கும், கேப்டன் திசாரா பெரேரா 18 ரன்களுக்கும், ஷதாப் கான் ரன்கள் ஏதுமின்றியும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.

அதேசமயம் மறுபக்கம் இறுதிவரை அணியின் வெற்றிக்காக போராடிய துனித் வெல்லலாகே 5 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 45 ரன்களைச் சேர்த்த போதும், கொழும்பு ஸ்டிரைக்கர்ஸ் அணியால் 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 172 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. இதன்மூலம் கலே மார்வெல்ஸ் அணியானது 7 ரன்கள் வித்தியாசத்தில் கொழும்பு ஸ்டிரைக்கர்ஸ் அணியை வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News