Lucknow Super Giants vs Punjab Kings Dream11 Prediction, IPL 2025: ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசனானது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும் தொடரில் பேட்டர்களின் அதிரடிக்கு பஞ்சமில்லாத காரணத்தால் ரசிகர்களுடைய எதிர்பார்ப்புகளும் எகிறியுள்ளது.

Advertisement

இந்நிலையில் இத்தொடரில் ஏப்ரல் 1ஆம் தேதி நடைபெற இருக்கும் 13ஆவது லீக் போட்டியில் ரிஷப் பந்த் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை எதிர்த்து ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டி லக்னோவில் உள்ள ஏக்னா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இரு அணிகளும் வெற்றிகளைப் பதிவுசெய்துள்ள கையோடு இப்போட்டியை எதிர்கொள்ளவுள்ளதால், இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. 

Advertisement

LSG vs PBKS: போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள்- லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ்
  • இடம் -   ஏக்னா கிரிக்கெட் மைதானம், லக்னோ
  • நேரம் - ஏப்ரல் 01, இரவு 7.30 மணி (இந்திய நேரப்படி)

LSG vs PBKS Pitch Report

ஐபிஎல் 2025 தொடரின் 13 போட்டி லக்னோவில் உள்ள ஏக்னா மைதானத்தில் நடைபெறவுள்ளது. இங்கு இதுவரை 09 சர்வதேச டி20 போட்டிகள் நடந்துள்ள நிலையில்,  அதில் 4 போட்டிகளில் ரன்களை சேஸ் செய்த அணி வெற்றி பெற்றுள்ளது, 5 போட்டிகளில் பேட்டிங் செய்த அணிகள் வெற்றிபெற்றுள்ளன. மேற்கொண்டு இந்த மைதானத்தின் முதல் இன்னிங்ஸின் சராசரி 151 ரன்களாகவும் உள்ளது. அதேசமயம் இந்த மைதானத்தில் குவிக்கப்பட்ட அதிகபட்ச ரன்களாக 199 ரன்கள் உள்ளது. இங்கு சுழற்பந்து வீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்துவார்கள் என்பதால், பேட்டர்களுக்கு பெரும் நெருக்கடி இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. 

LSG vs PBKS: Where to Watch?

Advertisement

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் அனைத்து போட்டிகளையும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி இந்தியாவில் நேரலை ஒளிபரப்பு செய்கிறது. அதேசமயம் ஆன்லைனில் பார்க்க விரும்பும் ரசிகர்கள் ஜியோ ஹாட்ஸ்டாரிலும் நேரலையில் கணலாம்.

LSG vs PBKS Head To Head Record

  • மோதிய போட்டிகள் - 04
  • லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் – 03
  • பஞ்சாப் கிங்ஸ் - 01

LSG vs PBKS Dream11 Team

  • விக்கெட் கீப்பர்- நிக்கோலஸ் பூரன் (துணை கேப்டன்), ரிஷப் பந்த்
  • பேட்ஸ்மேன்கள் - ஸ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), மிட்செல் மார்ஷ், பிரியான்ஷ் ஆர்யா, ஷஷாங்க் சிங்
  • ஆல்-ரவுண்டர்கள் - மார்கஸ் ஸ்டோய்னிஸ், கிளென் மேக்ஸ்வெல், அஸ்மதுல்லா உமர்சாய்
  • பந்து வீச்சாளர்கள் - அர்ஷ்தீப் சிங், ஷர்துல் தாக்கூர்.
Advertisement

Lucknow Super Giants vs Punjab Kings Probable Playing XI

Lucknow Super Giants Probable Playing XI: மிட்செல் மார்ஷ், ஐடன் மார்க்ராம், நிக்கோலஸ் பூரன், ரிஷப் பந்த் (கேப்டன்), ஆயுஷ் பதோனி, டேவிட் மில்லர், அப்துல் சமத், ஷர்துல் தாக்கூர், பிரின்ஸ் யாதவ், ரவி பிஷ்னோய், அவேஷ் கான்.

இம்பேக்ட் வீரர் - திக்வேஷ் சிங்.

Advertisement

Punjab Kings Probable Playing XI: பிரியான்ஷ் ஆர்யா, பிரப்சிம்ரன் சிங், ஷ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), அஸ்மதுல்லா ஒமர்சாய், கிளென் மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டோய்னிஸ், ஷஷாங்க் சிங், சூர்யான்ஷ் ஷேட்ஜ், மார்கோ ஜான்சன், அர்ஷ்தீப் சிங், யுஸ்வேந்திர சாஹல்.

இம்பேக்ட் வீரர் - வைஷாக் விஜய் குமார்

LSG vs PBKS Dream11 Prediction, LSG vs PBKS, LSG vs PBKS Dream11 Team, Fantasy Cricket Tips, IPL 2025, LSG vs PBKS Pitch Report, Today Match Prediction, Today Cricket Match, Dream11 Team, Playing XI, Pitch Report, Lucknow Super Giants vs Punjab Kings

Advertisement

Disclaimer: இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News