ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெறும் 61ஆவது லீக் போட்டியில் ரிஷப் பந்த் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை எதிர்த்து பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது.

Advertisement

இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டியானது லக்னோவில் உள்ள ஏக்னா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் சன்ரைசர்ஸ் அணி பிளே ஆஃப் வாய்ப்பிலிருந்து வெளியேறிய நிலையில் இப்போட்டியில் வெற்றிபெற்று ஆறுதலை தேட முயற்சிக்கும். அதேசமயம் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பில் உள்ளது. இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. இந்நிலையில் இரு அணிகளின் பலம், அணிகளின் உத்தேச லெவன், நேருக்கு நேர் தரவுகள் மற்றும் ஃபேண்டஸி லெவன் குறித்து இந்த பதிவில் பார்ப்போம்.

Advertisement

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்

ரிஷப் பந்த் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியானது நடப்பு ஐபிஎல் தொடரில் விளையாடிய 11 போட்டிகளில் 5 வெற்றி, 6 தோல்வியைச் சந்தித்த கையோடு, இப்போட்டியை எதிர்கொள்கிறது. மேற்கொண்டு இந்த ஆட்டத்தில் அந்த அணி வெற்றிபெற்றால் மட்டுமே பிளே ஆஃப் வாய்ப்பில் நீடிக்கும் என்பதால் கூடுதல் கவனத்துடன் இப்போட்டியை எதிர்கொள்ளவுள்ளது. அணியின் பேட்டிங்கில் மிட்செல் மார்ஷ், நிக்கோலஸ் பூரன், ஐடன் மார்க்ரம் ஆகியோர் அணியின் நம்பிக்கையாக உள்ளனர்.

அவர்களுடன் ரிஷப் பந்த், டேவிட் மில்லர், ஆயூஷ் பதோனி ஆகியோரும் சோபிக்கும் பட்சத்தில் அது அணிக்கு கைகொடுக்கும். அதேசமயம், பந்துவீச்சை பொறுத்தவரையில் மிகப்பெரும் பலவீனமாக உள்ளது. ஷர்துல் தாகூர், அவேஷ் கான், ரவி பிஷ்னாய் உள்ளிட்டோர் மட்டுமே அந்த அணியில் பந்துவீச்சை துறையை வழிநடத்துவதால் இப்போட்டியை அந்த அணி எவ்வாறு எதிர்கொள்ளும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. 

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் உத்தேச லெவன்: ஐடன் மார்க்ரம், மிட்செல் மார்ஷ், நிக்கோலஸ் பூரன், ரிஷப் பந்த் (கேப்டன்), ஆயுஷ் பதோனி, டேவிட் மில்லர், அப்துல் சமத், அவேஷ் கான், பிரின்ஸ் யாதவ், ரவி பிஷ்னோய், திக்வேஷ் ரதி.

Advertisement

சன்ரைசர்ஸ் ஹைதராபாத்

பாட் கம்​மின்ஸ் தலை​மையி​லான சன்​ரைசர்ஸ் ஹைத​ரா​பாத் அணி நடப்பு ஐபிஎல் தொடரில் இதுவரை விளையாடிய 11 போட்டிகளில் 3 வெற்றி 7 தோல்விகளை பெற்று பிளே  ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பை இழந்துள்ளது. இதனால் இத்தொடரில் எஞ்சியுள்ள போட்டிகளில் வெற்றிபெற்று ஆறுதலை தேடும் முயற்சியில் அந்த அணி விளையாடவுள்ளது. அணியின் பேட்டிங்கில் ஆபிஷேக் சர்மா, இஷான் கிஷான், ஹென்ரிச் கிளாசென், அனிகெத் வர்மா உள்ளிட்டோர் சிறப்பாக செயல்படுகின்றனர். 

அதேசமயம் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள டிராவிஸ் ஹெட் இந்த போட்டியில் விளையாட மாட்டார் என்ற தகவல் வெளியாகிவுள்ளது அணிக்கு பின்னடைவாக பார்க்கப்பாடுகிறது. அணியின் பந்துவீச்சை பொறுத்தவரையில் கேப்டன் பாட் கம்மின்ஸ், ஹர்ஷல் படேல் ஆகியோரைத் தவிர்த்து மற்ற வீரர்கள் பெரிதளவில் சோபிக்க தவறி வருவது அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தி வருகிறது. இதனால் இன்றைய ஆட்டத்தில் அந்த அணி வெற்றிபெறுமா என்ற கேள்விகள் அதிகரித்துள்ளன.

Advertisement

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் உத்தேச லெவன்: அபிஷேக் சர்மா, டிராவிஸ் ஹெட், இஷான் கிஷான், ஹென்ரிச் கிளாசென், அனிகேத் வர்மா, நிதிஷ் குமார் ரெட்டி, பாட் கம்மின்ஸ் (கேப்டன்), ஹர்ஷல் படேல், இஷான் மலிங்கா, ஜீஷன் அன்சாரி, ஜெய்தேவ் உனத்கட்.

நேருக்கு நேர்

  • மோதிய போட்டிகள் - 05
  • லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் – 04
  • சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - 01

Also Read: LIVE Cricket Score

Advertisement

ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்

  • விக்கெட் கீப்பர்- நிக்கோலஸ் பூரன், ஹென்ரிச் கிளாசென்
  • பேட்ஸ்மேன்கள் - மிட்செல் மார்ஷ், டிராவிஸ் ஹெட், ஆயுஷ் படோனி
  • ஆல்-ரவுண்டர்கள் - ஐடன் மார்க்ராம் (கேப்டன்), அபிஷேக் சர்மா (துணை கேப்டன்), நிதிஷ் குமார் ரெட்டி
  • பந்துவீச்சாளர்கள் - பாட் கம்மின்ஸ், திக்வேஷ் ரதி, பிரின்ஸ் யாதவ்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News