பாகிஸ்தான் ஒருநாள் தொடருக்கான தென் ஆப்பிரிக்க அணி அறிவிப்பு!

Updated: Thu, Dec 12 2024 22:30 IST
Image Source: Google

தென் ஆப்பிரிக்க அணி தற்சமயம் சொந்த மண்ணில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடரிலும், இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும் விளையாடவுள்ளது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொட்ரானது நடைபெற்று வருகிறது. 

இதில் நடந்து முடிந்த முதல் டி20 போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியதுடன், 1-0 என்ற கணக்கில் தொடரிலும் முன்னிலைப் பெற்றுள்ளது. இதனையடுத்து தென் ஆப்பிரிக்கா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி நாளை (டிசம்பர் 13) செஞ்சூரியனில் நடைபெறவுள்ளது. இப்போட்டியிலும் தென் ஆப்பிரிக்க அணி வெற்றிபெறும் பட்சத்தில் டி20 தொடரை கைப்பற்றும் என்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. 

இதனைத்தொடர்ந்து தென் ஆப்பிரிக்கா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது டிசம்பர் 17ஆம் தேதி தொடங்கவுள்ளது. இந்நிலையில், இந்த ஒருநாள் தொடருக்கான தென் ஆப்பிரிக்க அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. இதில் காயத்திலிருந்து மீண்டுள்ள டெம்பா பவுமா மீண்டும் தென் ஆப்பிரிக்க ஒருநாள் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். 

இதுதவிர்த்து, காகிசோ ரபாரா, ஹென்ரிச் கிளாசென், டேவிட் மில்லர் மற்றும் கேசவ் மஹாராஜ் உள்ளிட்டோரும் தென் ஆப்பிரிக்க ஒருநாள் அணியில் மீண்டும் இடம்பிடித்துள்ளனர். இதில் காகிரோ ரபாடா கடந்தாண்டு இந்தியாவில் நடந்து முடிந்த ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கு பிறகு முதல் முறையாக மீண்டும் தென் ஆப்பிரிக்க ஒருநாள் அணியில் இடம்பிடித்துள்ளார். 

 

அதேசமயம் நட்சத்திர பேட்டர்கள் டேவிட் மில்லர் மற்றும் ஹென்ரிச் கிளாசென் ஆகியோரும் 2023ஆம் ஆண்டிற்கு பிறகு மீண்டும் தென் ஆப்பிரிக்க ஒருநாள் அணியில் இடம்பிடித்துள்ளனர். மேற்கொண்டு தென் ஆப்பிரிக்க ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறிய தப்ரைஸ் ஷம்ஸிக்கும் இந்த அணியில் இடம்பிடித்துள்ளார். இதுதவிர்த்து அறிமுக வேகப்பந்து வீச்சாளர் குவேன மபாகாவுக்கு தென் ஆப்பிரிக்க ஒருநாள் அணியில் வாய்ப்பு பெற்றுள்ளார். 

Also Read: Funding To Save Test Cricket

தென் ஆப்பிரிக்க ஒருநாள் அணி: டெம்பா பவுமா (கேப்டன்), ஒட்னியல் பார்ட்மேன், டோனி டி ஸோர்ஸி, மார்கோ ஜான்சென், ஹென்ரிச் கிளாசென், கேசவ் மஹாராஜ், குவேனா மஃபாகா, ஐடன் மார்க்ரம், டேவிட் மில்லர், ஆண்டிலே பெஹ்லுக்வாயோ, ககிசோ ரபாடா, டிரிஸ்டன் ஸ்டப்ஸ், ரியான் ரிக்கல்டன், தப்ரைஸ் ஷம்சி, ரஸ்ஸி வான் டெர் டுசென்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை