தென் ஆப்பிரிக்க அணி தற்சமயம் இலங்கை அணிக்கு எதிராக சொந்த மண்ணில் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்று முடிந்த முதல் டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியானது 233 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியதுடன், 1-0 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரிலும் முன்னிலை வகித்துள்ளது. 

Advertisement

இதையடுத்து தென் ஆப்பிரிக்கா - இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டி க்கெபெர்ஹாவில் உள்ள செயின்ட் ஜார்ஜ் பார்க் கிரிக்கெட் மைதானத்தில் எதிர்வரும் டிசம்பர் 5அம் தேதி நடைபெறவுள்ளது. இப்போட்டியிலும் தென் ஆப்பிரிக்க அணி வெற்றிபெறும் பட்சத்தில் டெஸ்ட் தொடரை கைப்பற்றுவதுடன், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியளிலும் தங்கள் இடத்தை உறுதிசெய்யும் என்பதால் இப்போட்டி மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 

Advertisement

இந்நிலையில் இப்போட்டிக்கு முன்னதாக தென் அப்பிரிக்க அணி பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது. அதன்படி இலங்கை அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் போது காயமடைந்த தென் ஆப்பிரிக்க அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜெரால்ட் கோட்ஸி இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இருந்து விலகுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அடுத்து வரும் பாகிஸ்தான் அணிக்கு எதிரான தொடரில் இருந்து ஜெரால்ட் கோட்ஸி விலகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

முன்னதாக இப்போட்டியின் போதே தென் ஆப்பிரிக்க வீரர் வியான் முல்டர் காயமடைந்து தொடரில் இருந்து விலகிய நிலையில் தற்போது ஜெரால்ட் கோட்ஸியும் விலகியுள்ளது அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. அதேசமயம் இலங்கை தொடரில் இருந்து விலகிய ஜெரால்ட் கோட்ஸிக்கு பதிலாக இளம் வேகப்பந்து வீச்சாளர் குவேனா மபகா தென் ஆப்பிரிக்க டெஸ்ட் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். 

தென் ஆப்பிரிக்க அணி: டெம்பா பவுமா (கேப்டன்), டேவிட் பெடிங்ஹாம், மேத்யூ பிரீட்ஸ்கீ, குவேனா மபகா, டோனி டி ஸோர்ஸி, மார்கோ ஜான்சன், கேசவ் மகாராஜ், ஐடன் மார்க்ராம், செனுரன் முத்துசாமி, டேன் பேட்டர்சன், ககிசோ ரபாடா, டிரிஸ்டன் ஸ்டப்ஸ், ரியான் ரிக்கல்டன், கைல் வெர்ரைன்.

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News