தான் எதிர்கொள்ள மிகவும் கடினமான பந்துவீச்சாளர்கள் இவர்கள் தான் - மார்னஸ் லபுசாக்னே ஓபன் டாக்!
ஆஸ்திரேலியா - இங்கிலாந்து இடையேயான பாரம்பரியமான ஆஷஸ் டெஸ்ட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடந்துவருகிறது. இந்த ஆஷஸ் தொடரில் அபாரமாக விளையாடிவரும் ஆஸ்திரேலிய அணி 3-0 என தொடரை வென்றுவிட்டது. நான்காவது டெஸ்ட் டிரா ஆனது. கடைசி டெஸ்ட் போட்டி ஹோபர்ட்டில் நடக்கிறது.
ஆஸ்திரேலிய அணி அபாரமாக விளையாடி வரும் நிலையில், அந்த அணியின் வெற்றியில் முக்கிய பங்காற்றிய மார்னஸ் லபுஷேன், ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் முதலிடத்தில் உள்ளார். கடந்த 2019ஆம் ஆண்டு ஆஷஸ் தொடரில் ஸ்டீவ் ஸ்மித் கன்கஷனில் இருந்தபோது, அவருக்கு கன்கஷன் மாற்று வீரராக டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமான மார்னஸ் லபுசாக்னே, இரண்டரை ஆண்டில் 22 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 2,171 ரன்கள் அடித்துள்ளார்.
நடப்பு ஆஷஸ் தொடரிலும் சிறப்பாக விளையாடி நம்பர் 1 டெஸ்ட் பேட்ஸ்மேனாக திகழும் மார்னஸ் லபுசாக்னே இதுவரை அவரது கெரியரில் அவர் எதிர்கொண்ட கடினமான பந்துவீச்சாளார் யார் என்ற ரசிகரின் கேள்விக்கு ஜோஃப்ரா ஆர்ச்சர் மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் என பதிலளித்துள்ளார்.
இங்கிலாந்தின் அபாயகர பந்துவீச்சாளர்களில் ஒருவரான ஆர்ச்சர், 7 முறை லபுசாக்னேவை வீழ்த்தியுள்ளார். அதேபோல் உலகத்தரம் வாய்ந்த சுழற்பந்துவீச்சாளரான ரவிச்சந்திரன் அஸ்வினின் பந்துவீச்சை எதிர்கொள்வதும் மிகவும் கடினம் என்று தெரிவித்துள்ளார்.